ஐபிஎல் 2025: கடைசி கட்டத்தில் திக் திக் நிமிடங்கள்.. மேட்ச்சை மாற்றிய ஹேசில்வுட்.. உள்ளூரில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு (ஆர்.ஆர்) எதிரான மோதலின் போது, விராட் மற்றும் படிக்கல் இரண்டாவது விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 95 ரன்களைச் சேர்த்தனர். இந்த ஜோடி இதுவரை மொத்தம் 426 ரன்களை எட்டினர். ஆர்சிபி 20 ஓவர்களில் 205/5 ரன்கள் எடுக்க அவர்களின் கூட்டணி முக்கிய பங்கு வகித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் 205 ரன்களை குவித்தது ஆர்சிபி. சேஸிங் செய்ததில் ராஜஸ்தான் 9 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம், உள்ளூரில் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்றது பெங்களூர் அணி.
ராஜஸ்தான் விளையாடியபோது 18வது ஓவரில் ரன்களை வாரி வழங்கினார் புவனேஸ்வர் குமார். இதனால் திக் திக் நிமிடமாக மாறியது. மைதானமும் அமைதியானது. ஆர்சிபி ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், 19வது ஓவரில் ஹேசில்வுட் அற்புதமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை சுருட்டினார். மொத்தமாக அவர் இந்த மேட்ச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு (ஆர்.ஆர்) எதிரான மோதலின் போது, விராட் மற்றும் படிக்கல் இரண்டாவது விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 95 ரன்களைச் சேர்த்து, ஒரு ஜோடியாக மொத்தம் 426 ரன்களை எட்டினர். ஆர்சிபி 20 ஓவர்களில் 205/5 ரன்கள் எடுக்க அவர்களின் கூட்டணி முக்கிய பங்கு வகித்தது.