ஐபிஎல் 2025: முதலில் பைனலுக்கு செல்லப் போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி பலப்பரிட்சை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: முதலில் பைனலுக்கு செல்லப் போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி பலப்பரிட்சை

ஐபிஎல் 2025: முதலில் பைனலுக்கு செல்லப் போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி பலப்பரிட்சை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 29, 2025 07:00 AM IST

இந்த சீசனில் முதல் அணியாக பைனலுக்கு செல்லப்போவது யார் என பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி அணி பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகளாக இருக்கின்றன.

ஐபிஎல் 2025: முதலில் பைனலுக்கு செல்லப் போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி பலப்பரிட்சை
ஐபிஎல் 2025: முதலில் பைனலுக்கு செல்லப் போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி பலப்பரிட்சை

இந்த இரு அணிகளும் லீக் சுற்று முடிவில் 19 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும், ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்திலும், ஆர்சிபி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் 2014க்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து குவாலிபயர் சுற்று போட்டிகளில் விளையாடுகிறது. ஆர்சிபி அணியை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டாவது முறையாக ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றுள்ளது.

ஸ்டார் வீரர்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலீஸ் நல்ல பார்மில் உள்ளார்கள். பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், யான்சன், ஸ்பின்னரான் பிரார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஆர்சிபி அணியும் சமபலம் பொருந்திய அணியாகவே உள்ளது. பேட்டிங்கில் சால்ட், கோலி, ராஜத் பட்டிதார், மயங்க் அகர்வால், ஜித்தேஷ் ஷர்மா என நீண்ட பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அதேபோல் பவுலிங்கில் ஹசில்வுட், புவனேஷ் குமார், யாஷ் தயாள் திருப்புமுனை ஏற்படுத்தகூடிய பவுலர்களாக இருக்கிறார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை 35 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 18 போட்டிகளிலும், ஆர்சிபி 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிக்கொண்டு இரண்டு மோதில்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி, குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எதிராக குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும்.

பிட்ச் ரிப்போர்ட்

இந்த போட்டி நடக்கும் முல்லான்பூர் மைதானம் பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் சாதகமாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பின் பவுலர்கள் இங்கு ஜொலித்துள்ளார்கள். இன்றைய ஆட்டத்தில் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் என்றாலும், பேட்ஸ்மேன்களின் ரன் வேட்டை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இரு அணிகளின் உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீ்ப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்

ஆர்சிபி அணி: விராட் கோலி, பில் சால்ட், மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), 5 ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹாசில்வுட்,