ஐபிஎல் 2025: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி.. சம்பவம் செய்த பஞ்சாப்! கொல்கத்தா தோல்வி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி.. சம்பவம் செய்த பஞ்சாப்! கொல்கத்தா தோல்வி

ஐபிஎல் 2025: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி.. சம்பவம் செய்த பஞ்சாப்! கொல்கத்தா தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 15, 2025 11:18 PM IST

ஐபிஎல் 2025: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த ஸ்கோர் அடித்து அதை எதிரணியை அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ். கொலகத்தா நைட் ரைடர்ஸ் 112 ரன்கள் சேஸ் செய்ய முடியாமல் 16 ரன்களில் தோல்வியை தழுவியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி.. சம்பவம் செய்த பஞ்சாப்! கொல்கத்தா தோல்வி
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி.. சம்பவம் செய்த பஞ்சாப்! கொல்கத்தா தோல்வி (AFP)

பஞ்சாப் கிங்ஸ் தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முந்தைய போட்டியில் சிஎஸ்கே அணியை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து வீழ்த்தியது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்த பெர்குசனுக்கு பதிலாக சேவியர் பார்ட்லெட், ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்க்கு பதிலாக ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் கொல்கத்தா அணியிலும் மொயின் அலிக்கு பதிலாக அன்ரிச் நார்ட்ஜே சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 111 ரன்களில் ஆல்அவுட்டான நிலையில், இதை சேஸ் செய்த கொல்கத்தா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைவான ஸ்கோர் அடித்து அதை எதிரணியை அடிக்க விடாமல் வீழ்த்திய அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி நிகழ்த்தியுள்ளது.

கொல்கத்தா சேஸிங்

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், கொல்கத்தா பவுலர்களின் துல்லிய பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியது. இதைத்தொடர்ந்து 112 ரன்கள் என்ன எளிய இலக்கை விரட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15.1 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. ரகுவன்ஷி 37, அஜிங்கியா ரஹானே 17, ஆண்ட்ரே ரசல் 17 ஆகிய மூன்று பேட் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் பவுலர்களில் சஹால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார். மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேவியார் பார்லெட், அர்ஷ்தீப், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ரஹானே - ரகுவன்ஷி பார்ட்னர்ஷிப்

எளிய இலக்காக இருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மோசமான தொடக்கம் அமைந்தது. ஓபனர்களான சுனில் நரேன் 5, டி காக் 2 என அடுத்தடுத்து அவுட்டானார்கள். முதல் 2 ஓவரில் 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு ரஹானே - ரகுவன்ஷி ஆகியோர் பார்டனர்ஷிப் அமைத்தனர்.

இவர்கள் இருவரும் கொஞ்சம் அதிரடி காட்ட பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடி 55 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்த நிலையில் ரஹானே 17 பந்துகளில் 17, இம்பேக்ட் வீரராக பேட் செய்த ரகுவன்ஷி 28 பந்துகளில்37 ரன்கள் அடித்த நிலையில் ஸ்பின்னர் சஹால் பந்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

சரிந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்

இதன் பிறகு பேட் செய்ய வந்த வெங்கடேஷ் ஐயர் 7, ரிங்கு சிங் 2, ரமன்தீப் சிங் 0, ஹர்ஷித் ராணா 3, வைபவ் அரோரா 0 என அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

இந்த சீசனில் பேட்டிங்கில் பெரிதாக பங்களிப்பு தராமல் இருந்து வந்த ரசல், 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 17 ரன்கள் அடித்தார். அனைத்து பேட்ஸ்மேன்களும் அவுட்டாக ரசல் மட்டும் கடைசி பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். இருப்பினும் ஆட்டத்தை பினிஷ் செய்யாமல் யான்சன் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

சஹால் அபாரம்

பவர்ப்ளே முடிந்த பின்னர் மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசிய பஞ்சாப் கிங்ஸ் ஸ்பின்னர் சஹால் 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை தூக்கினார். 14 டாட் பந்துகளை வீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார்

இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் யான்சந் 3.1 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் மற்றும் 12 டாட் பந்துகள், அர்ஷ்தீப் சிங் 3 ஓவர், ஒரு மெய்டன், 11 ரன்கள் , ஒரு விக்கெட் மற்றும் 10 டாட் பந்துகளை வீசினார்.

கடந்த 2009 சீசனில் 116 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணியை 92 ரன்களில் கட்டுப்படுத்தியது. இதுவே ஒரு அணி குறைந்த ஸ்கோர் அடித்து எதிரணியை அடிக்க விடாமல் கட்டுப்படுத்திய ஸ்கோராக இருந்தது. தற்போது 16 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.

இந்த த்ரில் வெற்றிக்கு பிறகு 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று நான்காவது இடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா அணி 6வது இடத்துக்கு கீழே இறங்கியது

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.