ஐபிஎல் 2025: காலாவதியான பழைய பார்முலா.. சிஎஸ்கேவின் புதிய திட்டம் என்ன? பஞ்சாப்புக்கு எதிராக பலப்பரிட்சை
ஐபிஎல் 2025: இம்பேக்ட் வீரராக ஷிவம் துபே, தோனியின் பினிஷ் என்கிற சிஎஸ்கேவின் கேம் பிளான் கணிக்ககூடியதாகவிட்டது. காலாவதியான இந்த பார்மூலாவை மாற்றி அமைத்து புதிய திட்டத்துடன் களமிறங்க வேண்டிய சூழலில் நல்ல பார்மில் இருந்து வரும் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக பலப்பரிட்சை செய்ய இருக்கிறது.

ஐபிஎல் 2025 தொடரின் 22வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூரில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 9வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த சீசனில் முதல் முறையாக உள்ளூர் மைதானமான முல்லான்பூரில் களமிறங்கிய பஞ்சாப், முதல் தோல்வியையும் சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து தோல்வியுற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி பெறும் ஹார்ரிக் தோல்வியாக அமைந்தது.
இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியை பெற்றிருப்பதால், வெற்றி பாதைக்கு திரும்புவதற்கான வியூகத்துடனும், திட்டங்களுடனும் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்