ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணி தரமான பந்துவீச்சு.. 162 ரன்களுக்கு SRH அணியை கட்டுப்படுத்தியது!
ஐபிஎல் 2025: ஹர்திக் பாண்டியா தலைமையிலான MI அணி 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 7-வது இடத்திலும், 2016 சாம்பியனான ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.

ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை வான்கடே மைதானத்தில் 33 வது மேட்ச் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் விளையாடவுள்ளது.
தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மாவின் கேட்ச்களை தவறவிட்டது மும்பை. இதையடுத்து, அவர் 40 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருடன் டிராவிஸ் ஹெட் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 2 ரன்னிலும், நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களும் எடுத்து நடையைக் கட்டினர். ஹென்றிச் கிளாசென் சிறப்பாக விளையாடி 37 ரன்கள் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக பந்துவீசியது. வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 1 விக்கெட்டையும், போல்ட் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.