ஐபிஎல் 2025: மும்பை மண்ணில் ஹார்திக் டீமை இன்று எதிர்கொள்கிறது ஆர்சிபி.. பிட்ச் ரிப்போர்ட், உத்தேச பிளேயிங் லெவன் இதோ
ஐபிஎல் 2025: வான்கடே மைதானத்தில் உள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் உதவியாக இருக்கும். அரபிக் கடலுக்கு அருகாமையில் இருப்பது ஸ்விங் பந்து வீச்சாளர்களுக்கு கணிசமாக உதவுகிறது.

ஐபிஎல் 2025: மும்பை மண்ணில் ஹார்திக் டீமை இன்று எதிர்கொள்கிறது ஆர்சிபி.. பிட்ச் ரிப்போர்ட், உத்தேச பிளேயிங் லெவன் இதோ (AP)
ஐபிஎல் 2025: இந்தியன் பிரீமியர் லீக்கின் 20வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும்.
குஜராத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆர்சிபி, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளனர். மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து போராடி வருகிறது. இன்று சொந்த மண்ணில் விளையாடும் அவர்கள், எல்எஸ்ஜி அணிக்கு எதிரான முந்தைய தோல்விக்குப் பிறகு மீண்டு வர முயற்சிக்கும். இது ஒரு பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.