ஐபிஎல் 2025: பண்டியா, திலக் வர்மா போராட்டம் வீண்.. கடைசி ஓவரில் விழுந்த 3 விக்கெட்டுகளை.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி
ஐபிஎல் 2025: திலக் வர்மா - ஹர்திக் பாண்டியா ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டிபோதிலும் அடுத்தடுத்து அவுட்டானது திருப்புமுனையாக அமைந்தது. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்சிபி பவுலர் க்ருணால் பாண்டியா அணியை வெற்றி பெற செய்தார்.

ஐபிஎல் 2025 தொடரின் போட்டி 20, ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வியுடன் 8வது இடத்தில் இருந்தது.
ராயல் சேலஞர்ஸ் (ஆர்சிபி) அணி தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த இரு அணிகளும் தோல்வியில் இருந்து வெற்றி பாதைக்கும் திரும்பும் விதமாக இந்த போட்டி அமைந்து இருந்தது.
ஆர்சிபி அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் திரும்பியுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு, ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டியில் களமிறங்கினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா