ஐபிஎல் 2025: ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்! அப்துல் சமாத் அதிரடியால் லக்னோ 180 ரன்கள் குவிப்பு.. ராஜஸ்தான் மோசமான பவுலிங்
ஐபிஎல் 2025: ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கி விட்டார் அப்துல் சமாத். இந்த ஓவரில் 27 ரன்கள் அடிக்கப்பட்டதால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 180 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் ஷர்மா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் 2025 தொடரின் 36வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வதி இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முந்தையை போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீளும் விதமாக இந்த போட்டி அமைந்திருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்ச சாம்சன் இந்த போட்டியில் விளையாடவில்லை. எனவே ரியான் பராக் கேப்டன்சி செய்கிறார். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி இம்பேக்ட் வீரர் லவிஸ்டில் இடம்பிடித்துள்ளார். அவர் களமிறக்கப்பட்டால் ஐபிஎல் வரலாற்றில் களமிறங்கும் இளவயது வீரர் ஆவார். லக்னோ அணியில் ஆகாஷ் தீப்க்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
