ஐபிஎல் 2025: லக்னோ vs மும்பை அணிகள் இன்று மோதல்.. மேட்ச் நேரம், பிட்ச் ரிப்போர்ட் விவரம் உள்ளே
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனை தொடர்ச்சியான தோல்விகளுடன் தொடங்கியது, இருப்பினும், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்து ஒரு உறுதியான வெற்றியைப் பதிவு செய்து தங்கள் பயணத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வந்தது

ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG), ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் வலிமையான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்கொள்கிறது.
முந்தைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது. ரிஷப் பந்த் தலைமையிலான அணி, சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் ஏமாற்றமளிக்கும் தோல்வியை சந்தித்தது, ஐந்து முறை சாம்பியனான மும்பை அணியை எதிர்கொள்ளும் எல்எஸ்ஜி, இந்த சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மட்டுமே லக்னோ இந்த சீசனில் வீழ்த்தியிருக்கிறது.
மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனை தொடர்ச்சியான தோல்விகளுடன் தொடங்கியது, இருப்பினும், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்து ஒரு உறுதியான வெற்றியைப் பதிவு செய்து தங்கள் பயணத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வந்தது. பாண்ட்யா தலைமையிலான மும்பை, வெற்றியை தொடரும் நம்பிக்கையில் உள்ளது.