ஐபிஎல் 2025: குஜராத்துக்கு நல்ல தொடக்கம் அமைத்த கில், சாய் சுதர்சன்.. கடைசி நேரத்தில் கட்டுப்படுத்திய லக்னோ
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: குஜராத்துக்கு நல்ல தொடக்கம் அமைத்த கில், சாய் சுதர்சன்.. கடைசி நேரத்தில் கட்டுப்படுத்திய லக்னோ

ஐபிஎல் 2025: குஜராத்துக்கு நல்ல தொடக்கம் அமைத்த கில், சாய் சுதர்சன்.. கடைசி நேரத்தில் கட்டுப்படுத்திய லக்னோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 12, 2025 05:35 PM IST

ஐபிஎல் 2025: குஜராத் அணியின் ஓபனர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் லக்னோ பவுலர்கள் நன்கு கட்டுப்படுத்திய நிலையில் பினிஷிங் சரியமாக அமையாமல் குஜராத் 200 ரன்களுக்கும் குறைவாகவே ஸ்கோர் செய்துள்ளது.

குஜராத்துக்கு நல்ல தொடக்கம் அமைத்த கில், சாய் சுதர்சன்.. கடைசி நேரத்தில் கட்டுப்படுத்திய லக்னோ
குஜராத்துக்கு நல்ல தொடக்கம் அமைத்த கில், சாய் சுதர்சன்.. கடைசி நேரத்தில் கட்டுப்படுத்திய லக்னோ (PTI)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. குஜராத் டைட்டன்ஸ் தனது முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக ஹிம்மத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் 60, சாய் சுதர்சன் 56 ரன்கள் அடித்தனர்.

லக்னோ பவுலர்களில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

நல்ல தொடக்கம்

குஜராத் அணிக்கு ஓபனர்களான சாய் சுதர்சன் - சுப்மன் கில் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தனர்.

இருவரும் நிதானமும், அதிரடியும் கலந்து பேட் செய்தனர். பவர்ப்ளே முடிவில் குஜராத் டைட்டன்ஸ் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது. 30 பந்துகளில் அரைசதமடித்த கில் தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.

32 பந்துகளில் அரைசதமடித்த சாய் சுதர்சன் அரைசதமடித்த தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.

பினிஷிங் சொதப்பல்

கில் - சாய் சுதர்சன் கூட்டணியின் அதிரடியால் குஜராத் டைட்டன்ல் முதல் 10 ஓவரில் 103 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் கடைசி 10 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 4 ஓவரில் 41 ரன்களை எடுத்தது. குஜராத் அணிக்கு தொடக்கம் அமைந்த அளவுக்கு பினிஷிங் சரியாக அமையாமல் போனது.

லக்னோ பவுலர்களில் ஆகாஷ் தீப் மட்டும் 3 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ரன்களை வாரி வழங்கியிருந்தார். அதே போல் ஐடன் மார்க்ரம் ஒரு ஓவருக்கு 15 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த இருவர் மட்டும் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. மற்றபடி பவுலிங் செய்த ஷர்துல் தாக்கூர், திக்வேஷ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். 

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.