ஐபிஎல் 2025: வேட்டையாடு விளையாடு! அதிரடி தொடக்கம்.. Vintage தோனி பினிஷ்.. சிஎஸ்கேவுக்கு இரண்டாவது வெற்றி
ஐபிஎல் 2025: ஆட்டத்தின் 16வது களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டத்தை பினிஷ் செய்தார். முதல் இன்னிங்ஸில் ஒரு ஸ்டம்பிங், ரன் அவுட், கேட்ச் என ஒன் மேன் ஷோ நிகழ்த்தியதுடன் தமிழ் புத்தாண்டு நாளில் தமிழர்களுக்கு வெற்றியை பரிசாக அளித்துள்ளார்.

லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில், ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும் இருந்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்ரி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளூர் மைதானமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்றது.
இந்த சீசனின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது.
சிஎஸ்கே அணியில் அஸ்வின், கான்வே ஆகியோருக்கு பதிலாக ஷேக் ரஷீத், ஓவர்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். லக்னோ அணியில் மிட்சல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.
மேலும் படிக்க: ருதுராஜ்க்கு பிறகு 17 வயது இளம் பேட்ஸ்மேனை கண்டறிந்த சிஎஸ்கே
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி பவுலிங் செய்த நிலையில், முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 166 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
சிஎஸ்கே சேஸிங்
முன்னதாக, முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரி விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 பந்துகள் எஞ்சியிருக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் 5 தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றியை பெற்றது.
சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 43, ரச்சின் ரவீந்திரா 37, ஷேக் ரஷீத் 27, தோனி 26 ரன்கள் அடித்தனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலர்களில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ஐடன் மார்க்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
அதிரடி தொடக்கம்
சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய ஷேக் ரஷீத் - ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடி தொடக்கத்தை தந்தனர். லக்னோ பவுலர்களுக்கு எதிராக அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 27 ரன்கள் அடித்து துர்தஷ்டவசமாக அவுட்டானார். பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது.
அணியின் மற்றொரு ஓபனரான ரச்சின் ரவீந்திராவும் விரைவாக ரன்களை குவித்த 22 பந்துகளில் 5 பவுண்டரிகளை அடித்து 37 ரன்கள் எடுத்த நிலையில், பெரிய ஷாட் முயற்சியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் திரிபாட்டி 9, ரவீந்திர ஜடேஜா 7, விஜய் ஷங்கர் 9 என அடுத்தடுத்து அவுட்டாகி மற்றொரு ஏமாற்றமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினர்.
தோனி பினிஷ்
ஆட்டத்தின் 15 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் இருந்தபோது களமிறங்கினார் தோனி. அப்போது 30 பந்துகளில் 56 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தனது வழக்கமான பாணியில் அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தினர்.
தோனியுடன் இணைந்து ஷிவம் துபேவும் நல்ல பார்டனர்ஷிப் அமைத்து 37 பந்துகளில் 43 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இந்த போட்டிக்கு பின்னர் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்றாலும், சிஎஸ்கே அணி மொத்தம் 14 போட்டிகளில் முதல் பாதி ஆட்டத்தை விளையாடி முடித்துள்ள நிலையில், 2 வெற்றிகள், 5 தோல்வி என 4 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது.
