ஐபிஎல் 2025: சொந்த மண்ணில் சொல்லி அடிக்குமா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. சிஎஸ்கேவுடன் இன்று மோதல்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: சொந்த மண்ணில் சொல்லி அடிக்குமா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. சிஎஸ்கேவுடன் இன்று மோதல்

ஐபிஎல் 2025: சொந்த மண்ணில் சொல்லி அடிக்குமா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. சிஎஸ்கேவுடன் இன்று மோதல்

Manigandan K T HT Tamil
Published Apr 14, 2025 05:45 AM IST

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை தொடக்க ஆட்டத்தில் வீழ்த்திய பிறகு, சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல்லில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை.

ஐபிஎல் 2025: சொந்த மண்ணில் சொல்லி அடிக்குமா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. சிஎஸ்கேவுடன் இன்று மோதல்
ஐபிஎல் 2025: சொந்த மண்ணில் சொல்லி அடிக்குமா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. சிஎஸ்கேவுடன் இன்று மோதல்

ரிஷப் பந்த் பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மில் இல்லாவிட்டாலும், அவர் எல்எஸ்ஜி அணியை பாராட்டத்தக்க வகையில் வழிநடத்தியுள்ளார். முதல் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளுடன் போட்டியைத் தொடங்கிய லக்னோ, மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை சொந்த மைதானத்தில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 181 ரன்கள் என்ற இலக்கை இன்னும் மூன்று பந்துகள் மீதமுள்ள நிலையில் சேஸிங் செய்தது. எல்எஸ்ஜி அணி திங்கட்கிழமையும் தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர விரும்பும். சொந்த ஊர் என்பதால் அந்த அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும்.

இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை தொடக்க ஆட்டத்தில் வீழ்த்திய பிறகு, சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல்லில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், எம்எஸ் தோனி அணியின் கேப்டனாக மீண்டும் வந்தார். இருப்பினும், சிஎஸ்கே 103/9 என்ற ஸ்கோரை பதிவு செய்தது. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தோனியால் கூட ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த முடியவில்லை. கொல்கத்தா அணி இந்த இலக்கை மிக எளிதாக எட்டிப் பிடித்தது.

லக்னோ பிட்ச் ரிப்போர்ட்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானம் இதுவரை 17 ஐபிஎல் போட்டிகளை நடத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணிகள் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன, அதே போல் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. ஏகானா மைதானம் பொதுவாக பேட்டர்களுக்கு கடினமான மைதானமாக அறியப்படுகிறது. இருப்பினும், இந்த சீசனில், பந்து வீச்சாளர்களுக்கு மேற்பரப்பில் இருந்து அதிக உதவி கிடைக்கவில்லை. டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச விரும்புவார் என எதிர்பார்க்கலாம்.

நேருக்கு நேர்

இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. லக்னோ 3 முறையும், சென்னை 1 முறையும் ஜெயித்துள்ளது. 1 ஆட்டத்தில் ரிசல்ட் இல்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரு அணிகளும் மோதின.

உத்தேச பிளேயிங் லெவன்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ரிஷப் பந்த் (c/wk), மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப்.

இம்பேக்ட் வீரர்: திக்வேஷ் ரதி

சென்னை சூப்பர் கிங்ஸ்

ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், எம்எஸ் தோனி (c/wk), நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.

இம்பேக்ட் வீரர்: மதீஷ பதிரானா

இந்த மேட்ச்சை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி, வலைத்தளம் ஆகியவற்றிலும், ஸ்டார் ஸ்போர்ட் நெட்வொர்க்கிலும் கண்டு ரசிக்கலாம். மேட்ச் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும். 7 மணிக்கு டாஸ் போடப்படும்.

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 10 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம்.ஏ. அரசியல் அறிவியல் மற்றும் டிப்ளமோ ஜர்னலிசம் படித்துள்ள இவர், தினமணி நாளிதழ், நியூஸ் 7 தமிழ் மற்றும் ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.