ஐபிஎல் 2025: ‘அல்லு சில்லு செதறனுடா’ -MI பந்துவீச்சை சிதறடித்த மிட்செல் மார்ஷ், மார்க்ரம்!
ஐபிஎல் 2025: லக்னோவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 16 வது போட்டியில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 2025 தொடரில் 16வது மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் விளையாடவுள்ளது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் பாண்டியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்தது லக்னோ. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களம்புகுந்த மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் ஆகியோர் அருமையாக விளையாடி அரை சதம் விளாசினர். மார்ஷ் 60 ரன்கள், மார்க்ரம் 53 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர். ஆயுஷ் பதோனி 30 ரன்கள் விளாசினார். கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பூரன் 12 ரன்களிலும், அப்துல் சமத் 4 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
ஹார்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது முதல் 5 விக்கெட்டுகள் இந்த மேட்ச்சில் இருந்துதான் வந்தது. விக்னேஷ் புதூர் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். மிட்செல் சாண்ட்னருக்கு இந்த மேட்ச்சில் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.