ஐபிஎல் 2025: வைபவ், வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்துவீச்சு.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடர்ந்து 3-வது தோல்வி
ஐபிஎல் 2025: தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். டிராவிஸ் ஹெட் 4 ரன்கள், அபிஷேக் சர்மா 2 ரன்கள், இஷான் கிஷன் 2 ரன்கள் என நடையைக் கட்டினர். நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

ஐபிஎல் 2025: நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.எச்) இடையேயான ஐபிஎல் மோதலில் கொல்கத்தா அணி ஜெயித்தது. 15-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 201 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் விளையாடியது. ஆனால், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 16.4 ஓவர்களில் 120 ரன்களில் சுருண்டது. வருண் சக்கரவர்த்தி, வைபவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி SRH விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா 80 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
ஆனால், தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். டிராவிஸ் ஹெட் 4 ரன்கள், அபிஷேக் சர்மா 2 ரன்கள், இஷான் கிஷன் 2 ரன்கள் என நடையைக் கட்டினர். நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த கமிண்டு மெண்டிஸ் 27 ரன்களும், விக்கெட் கீப்பர் கிளாசன் 33 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இதையடுத்து, அவர்களின் நம்பிக்கை தகர்ந்தது. வைபவ் அரோரா, வருண் ஆகியோர் அற்புதமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கொல்கத்தா அணிக்கு எடுத்துக் கொடுத்தார்.
கொல்கத்தாவுக்கு இந்த மேட்ச்சில் கிடைத்த வெற்றி 2வது வெற்றியாகும். அதேநேரம், ஐதராபாத் அணிக்கு தொடர்ச்சியாக 3வது தோல்வி ஆகும்.