ஐபிஎல் 2025: இனிவரும் மேட்ச்களில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் கேகேஆர்.. ராஜஸ்தானுடன் இன்று மோதல்
ஐபிஎல் 2025: இதுவரை கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 31 போட்டிகளில் மோதியுள்ளன, அதில் கொல்கத்தா அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ராஜஸ்தான் அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் முடிவு இல்லை.

ஐபிஎல் 2025: இனிவரும் மேட்ச்களில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் கேகேஆர்.. ராஜஸ்தானுடன் இன்று மோதல் (PTI)
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 53வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் சொந்த மைதானமான கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் எதிர்கொள்கிறது. கேகேஆர் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வியுடன் இந்த சீசனைத் தொடங்கியது, ஆனால் அதன் பிறகு, அவர்களின் வெற்றி, தோல்வி மிகவும் கலவையாக உள்ளது. 10 மேட்ச்களில் 3 இல் வெற்றியும், 5 இல் தோல்வியுமாக அவர்கள் உள்ளனர்.
இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், பிளேஆஃப்களுக்கு தகுதி பெற அவர்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையில், அணியின் செயல்திறன் மிகவும் கணிக்க முடியாததாக உள்ளது, இது மாற வேண்டும்.