ஐபிஎல் 2025: தொடர் மழை..ஒரு ஓவருடன் தடைப்பட்ட ஆட்டம்.. பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி
தொடர் மழை பெய்த நிலையில், ஒரு ஓவர் வீசப்பட்ட நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தடைப்பட்டது. இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 44வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் 7வது இடத்திலும் இருந்தது.
பஞ்சாப் கிங்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கின.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா உமர்சாய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் ரமனாதீப் சிங்குக்கு பதிலாக சேட்டன் சக்காரியா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ரோவ்மன் பவல் இந்த சீசனில் முதல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
