ஐபிஎல் 2025: வான வேடிக்கை காட்டிய பூரான், மார்ஷ்.. லக்னோ அதிரடியால் கதிகலங்கிய கொல்கத்தா பவுலர்கள்! இமாலய இலக்கு
ஐபிஎல் 2025: தொடக்கம் முதல் இறுதி வரை நிறுத்தாமல் ரன் வேட்டையில் ஈடுபட்டனர் லக்னோ பேட்ஸ்மேன்கள். நிக்கோலஸ் பூரான், மிட்செல் மார்ஷ் அதிரடியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர்கள் கதிகலங்கி போனார்கள். 239 ரன்கள் என மிக பெரிய இமாலய இலக்கு கொல்கத்தாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 21வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 போட்டிகள் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 போட்டிகளில் 2 வெற்றிகள், 2 தோல்விகளை பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றியை பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை அணியை தோற்கடித்தது. புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் இந்த இரு அணிகளும் இருக்கும் நிலையில், டாப் 4 இடத்துக்கு முன்னேறும் விதமாக இந்த போட்டி அமைந்துள்ளது.
கொல்கத்தா, லக்னோ ஆகிய இரு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடி வெற்றி கூட்டணியுடன் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளன. லக்னோ அணியில் விளையாடும் ஷர்துல் தாக்கூருக்கு இது 100வது ஐபிஎல் போட்டியாக அமைந்துள்ளது.