ஐபிஎல் 2025: ரஹானே ஆமை வேக ஆட்டம்.. குஜராத் பவுலர்களிடம் பேட்ஸ்மேன்கள் சரண்டர்! கொல்கத்தாவுக்கு 5வது தோல்வி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ரஹானே ஆமை வேக ஆட்டம்.. குஜராத் பவுலர்களிடம் பேட்ஸ்மேன்கள் சரண்டர்! கொல்கத்தாவுக்கு 5வது தோல்வி

ஐபிஎல் 2025: ரஹானே ஆமை வேக ஆட்டம்.. குஜராத் பவுலர்களிடம் பேட்ஸ்மேன்கள் சரண்டர்! கொல்கத்தாவுக்கு 5வது தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Apr 21, 2025 11:54 PM IST

ஐபிஎல் 2025: கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோரை குவிக்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்ப, கேப்டன் ரஹானே மட்டும் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்தார். குஜராத் பவுலர்களுக்கு எதிராக சரண்டர் ஆன கொல்கத்தா 5வது தோல்வியை தழுவியுள்ளது.

ரஹானே ஆமை வேக ஆட்டம்.. குஜராத் பவுலர்களிடம் பேட்ஸ்மேன்கள் சரண்டர்! கொல்கத்தாவுக்கு 5வது தோல்வி
ரஹானே ஆமை வேக ஆட்டம்.. குஜராத் பவுலர்களிடம் பேட்ஸ்மேன்கள் சரண்டர்! கொல்கத்தாவுக்கு 5வது தோல்வி (AFP)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. குஜராத் டைட்டன்ஸ் தனது முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

கொல்கத்தா அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் டைடட்ன்ஸ் அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 198 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா சேஸிங்

முன்னதாக, டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்கியா ரஹானா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இலக்கை விரட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 50, ரகுவன்ஷி 27, ஆண்ட்ரே ரசல் 21 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதான பங்களிப்பு அளிக்கவில்லை.

குஜராத் பவுலர்களில் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

ரஹானே அரைசதம்

கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் அமையாமல் போனது. ஓபனர்களான ரஹ்மனுல்ல குர்பாஸ் 1, சுனில் நரேன் 17 ரன்கள் எடுத்து பவர்ப்ளே முடிவதற்குள் அவுட்டாகினர். கொல்கத்தா அணி பவர்ப்ளே ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.

மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்தி ரன்குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அவருடன் இணைந்து மற்ற பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். 36 பந்துகளில் அரைசதமடித்த ரஹானே ஸ்லோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.

வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்கள் என டெஸ்ட் போல் விளையாடினார். கொஞ்சம் அதிரடி காட்டிய ரசல், நீண்ட நேரம் நிலைத்து நிற்காமல் 15 பந்துகளில் 21 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.

ரகுவன்ஷி அதிரடி

கடைசி 4 ஓவரில் 80 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரகுவன்ஷி இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அப்போது களத்தில் ரிங்கு சிங்கும் இருந்தார். ரகுவன்ஷி அதிரடி காட்ட, ரிங்கு சிங் ரன்கள் குவிக்க திணறினார். கடைசி வரை அவுட்டாகமல் இருந்த 31 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அவர் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.

பவுலர்கள் அபாரம்

குஜராத் அணியில் மொத்தம் 6 பேர் பவுலிங் செய்த நிலையில், பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் 3 ஓவரில் 36 ரன்கள் என அதிகபட்சமாக விட்டுக்கொடுத்தார். அதேபோல் இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட இஷாந்த் ஷர்மா 2 ஓவரில் 1 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கிறது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அதே 7வது இடத்தில் உள்ளது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.