ஐபிஎல் 2025: முதல் சீசனிலேயே சாம்பியன்.. நான்கு தமிழ்நாடு வீரர்களை கொண்ட அணி - குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் பயணம்
ஐபிஎல் 2025, Gujarat Titans: முதல் சீசனிலேயே சாம்பியன், அடுத்த சீசனில் ரன்னர் அப் என மற்ற அணிகளின் வயிற்றில் புளியை கரைத்த அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கிய 2022, 2023 ஆகிய சீசன்களில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் கடந்த சீசனில் கேப்டன்சி மாற்றத்தால் தனது ஆதிக்கத்தை தொடரவில்லை.

ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த சீசனில் முதல் போட்டியானது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்கப்பட்ட முதல் சீசனில் இந்த இரு அணிகள் தான் மோதிக்கொண்டன. அந்த போட்டி பெங்களுருவில் வைkத்து நடைபெற்றது. இதன் பின்னர் 18வது சீசனில் இந்த இரு அணிகளும் முதல் போட்டியில் களமிறங்குகின்றன.
முதல் சீசனிலேயே சாம்பியன்
ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. அதன் படி புதிய அணியாக அகமதாபாத் நகரை மைப்படுத்து உருவாக்கப்பட்ட அணி தான் குஜராத் டைட்டன்ஸ். இதேபோல் லக்னோவை மையப்படுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை உருவாகப்பட்டது. இந்த இரு அணிகளும் 2022 சீசன் முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றன.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கேப்டனாக, இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பாண்டியா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மெகா ஏலம் காரணமாக மும்பை அணியின் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.
குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த பாண்டியா மண்ணின் மைதனாக இருந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. அத்துடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உள்ளூர் மைதானமாக 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அமர்ந்து பார்க்க கூடிய உலகின் பெரிய ஸ்டேடியமாக இருந்து வரும் நரேந்திர மோடி ஸ்டேடியம் கொடுக்கப்பட்டது.
அத்துடன் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களான சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், விஜய் ஷங்கர் போன்றோர் அணியில் இடம்பிடித்தனர். இளமை ப்ளஸ் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட அணியை சிறப்பாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியா, முதல் சீசனிலேயே அணியை சாம்பியன் ஆக்கினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் களமிறங்கிய முதல் சீசனில் கோப்பை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றது குஜராத் டைட்டன்ஸ்
மேலும் படிக்க: சிறந்த கேப்டன்கள் பட்டியலில் தோனியை முந்திய பாண்டியா
இரண்டாவது சீசனிலும் ஆதிக்கம்
நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு தனது இரண்டாவது சீசனாக ஐபிஎல் 2023 தொடரில் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ். 2023 சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. பைனலில் சிஎஸ்கே அணிக்கு எதிரான பரபரப்பு மிகுந்த போட்டியில் தோல்வியை தழுவி ரன்னர் அப் ஆனது.
குஜராத் அணி 2022, 2023 ஆகிய இரு சீசன்களிலும் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக வலம் வந்ததது.
கேப்டன்சி மாற்றம்
கடந்த 2024 சீசனிஸ் ஆர்டிஎம் விதிமுறைப்படி ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். களமிறங்கிய முதல் இரண்டு சீசன்களில் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த குஜராத் டைட்ன்ஸ், கடந்த சீசனில் 5 வெற்றியை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு கீழே இறங்கியது. இந்த சீசனில் குஜராத் அணி விளையாட இருந்த இரண்டு போட்டிகள் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டன.
மேலும் படிக்க: மூன்றாவது சதம்.. புதிய சாதனை படைத்த சுப்மன் கில்
குஜராத் அணிக்கு 2023 சீசனின் போதி ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரஷித் கான் இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சமபலம் பொருந்திய அணியாகவும், எதிரணிகளுக்கு தலைவலி தரக்கூடிய அணியாகவும் திகழ்கிறது.
ஐபிஎல் 2025 சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக சுப்மன் கில் தொடர்கிறார். புதிதாக இந்த சீசனில் ஜோஸ் பட்லர், ஜேரால்ட் கோட்சி, கரீம் ஜனத், கிளென் பிளிப்ஸ், ககிசோ ரபாடா, ருதர்போர்டு போன்ற வெளிநாட்டு வீரர்களும், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, பிரசித் கிருஷ்ணா போன்ற இந்திய வீரர்களும் அணியில் இணைந்துள்ளனர்.
சாம்பியன், ரன்னர் அப் என அடுத்தடுத்த சீசன்களில் மிரட்டிய குஜராத் டைட்டன்ஸ், நான்கு இளம் தமிழ்நாடு வீரர்களுடன் இந்த சீசனில் கவனம் பெறும் முன்னணி அணிகளுள் ஒன்றாக திகழ்கிறது.

டாபிக்ஸ்