ஐபிஎல் 2025: மூன்று பேர் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோர்.. சீட்டுகட்டு போல் சரிந்த ராஜஸ்தான் பேட்டிங்! டாப் இடத்தில் குஜராத்
ஐபிஎல் 2025: 218 என்கிர மிக பெரிய சேஸை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது. அந்த அணியில் மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ஸ்கோர் செய்தனர். குஜராத் அணி நான்காவது வெற்றியுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மூன்று பேர் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோர்.. சிட்டுகட்டு போல் சரிந்த ராஜஸ்தான் பேட்டிங்! டாப் இடத்தில் குஜராத் (Surjeet Yadav)
ஐபிஎல் 2025 தொடரின் 23வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டி தொடங்கும் முன் குஜராத் டைட்ன்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த. ராஜஸ்தான் ராயல்ஸ் 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 7வது இடத்தில் இருந்தது.
இந்த போட்டியில் குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஹசரங்காவுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் பவுலர் ஃபசல்ஹாக் ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளார்.
