ஐபிஎல் 2025: சிங் இஸ் கிங்.. சம்பவம் செய்த பஞ்சாப்.. விரட்டி வந்து 11 ரன்களில் தோல்வியை தழுவிய குஜராத் கிங்ஸ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: சிங் இஸ் கிங்.. சம்பவம் செய்த பஞ்சாப்.. விரட்டி வந்து 11 ரன்களில் தோல்வியை தழுவிய குஜராத் கிங்ஸ்

ஐபிஎல் 2025: சிங் இஸ் கிங்.. சம்பவம் செய்த பஞ்சாப்.. விரட்டி வந்து 11 ரன்களில் தோல்வியை தழுவிய குஜராத் கிங்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Mar 25, 2025 11:34 PM IST

ஐபிஎல் 2025: மிக பெரிய இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு அருகே வந்த போதிலும் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக பேட் செய்து 74 ரன்கள் அடித்தார்.

சம்பவம் செய்த பஞ்சாப்.. விரட்டி வந்து 11 ரன்களில் தோல்வியை தழுவிய குஜராத் கிங்ஸ்
சம்பவம் செய்த பஞ்சாப்.. விரட்டி வந்து 11 ரன்களில் தோல்வியை தழுவிய குஜராத் கிங்ஸ்

இதையடுத்து இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 243 ரன்கள் குவித்தது. இதையடுத்து மிக பெரிய இந்த இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் 232 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

குஜராத் சேஸிங்

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைதத்தொடர்ந்து பஞ்சாப் கிங் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 97,பிரியான்ஷ் ஆர்யா 47, அஷுடோஷ் ஷர்மா 44 என அதிரடி காட்ட 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது.

இதன்பின்னர் சேஸிங்கில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74, ஜோஸ் பட்லர் 54, ருதர்போர்டு 46 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் பவுலர்களில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

அதிரடி தொடக்கம்

தேவைப்படும் ரன்ரேட் ஒவருக்கு 12 ரன்களுக்கு மேல் இருந்த நிலையில், குஜராத் அணியின் ஓபனர்களாக களமிறங்கிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி வேட்டையை தொடங்கினர். பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது குஜராத்

அணியின் கேப்டன் கில் 14 பந்துகளில் 33 ரன்கள் விரைவாக அடித்துவிட்டு அவுட்டனார். மற்றொரு ஓபனரான சாய் சுதர்சன் தனது அதிரடியை தொடர்ந்தார். சிறப்பாக பேட் செய்த சாய் சுதர்சன் 31 பந்துகளில் அரைசதமடித்தார்.

அதன் பின்னரும் பவுண்டரி, சிக்ஸர் என ரன்களை குவித்த சுதர்சன் 41 பந்துகளில் 74 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சாய் சுதர்சன் - பட்லர் ஆகியோர் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர்

பட்லர் - ருதர்போர்டு பார்டனர்ஷிப்

சுதர்சன் அவுட்டான பிறகு இம்பேக் வீரராக ருதர்போர்டு களமிறக்கப்பட்டார். ஏற்கனவே களத்தில் 25 ரன்களுடன் இருந்த பட்லர், ருதர்போர்டு ஆகியோர் பார்டனர்ஷிப் அமைத்து ரன்களை குவித்து வந்தனர்.

அபாரமாக பேட் செய்த பட்லர் அரைசதமடித்த நிலையில் 54 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார். பட்லர் - ருதர்போர்டு இணைந்து 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவர் வரை பேட் செய்த ருதர்போர்டு 28 பந்துகளில் 46 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார்.

அர்ஷ்தீப் சிங் கலக்கல்

குஜராத் பவுலர்களை போல் பஞ்சாப் பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். குஜராத் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்ஸர்களை என பஞ்சாப் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினர்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மட்டும் கட்டுப்பாடுடன் பந்து வீசினார். 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் கடைசி ஓவரில் ஒரு ரன் அவுட்டும் செய்தார். அதேபோல் இம்பேக்ட் வீரராக களமிறங்கப்பட்ட விஜயகுமார் வைஷாக் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் முதல் 2 ஓவரில் 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினார்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.