ஐபிஎல் 2025: டெல்லி அணியை சமாளிக்குமா குஜராத் டைட்டன்ஸ்.. இன்று அகமதாபாத்தில் மோதல்
குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தொடக்க ஆட்டத்திலும் முந்தைய மேட்ச்சிலும் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது. மற்ற மேட்ச்களில் ஜெயித்துள்ளது. இந்த சீசனில் சொந்த மண்ணில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே குஜராத் அணி தோல்வி அடைந்திருக்கிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 35வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். இன்று மாலை 3.30 மணிக்கு மேட்ச் நடைபெறவுள்ளது. 3 மணிக்கு டாஸ் போடப்படும். ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இந்த மேட்ச்சை கண்டு ரசிக்கலாம்.
முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு பரபரப்பான சூப்பர் ஓவரில் டெல்லி வீழ்த்தியது. கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்றதற்காக ஸ்டார்க் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூப்பர் ஓவரிலும் அவர் பந்து வீசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில், இன்றைய ஆட்டம் மிகவும் கடினமான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தொடக்க ஆட்டத்திலும் முந்தைய மேட்ச்சிலும் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது. மற்ற மேட்ச்களில் ஜெயித்துள்ளது. இந்த சீசனில் சொந்த மண்ணில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே குஜராத் அணி தோல்வி அடைந்திருக்கிறது. 2 ஆட்டங்களில் வாகை சூடியிருக்கிறது. இன்று அங்கு அந்த அணி மீண்டும் விளையாடவுள்ளதால் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
உத்தேச பிளேயிங் லெவன்
குஜராத் டைட்டன்ஸ்
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ஆர் டெவாடியா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், அர்ஷத் கான், முகமது சிராஜ்.
டெல்லி கேபிடல்ஸ்
கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), டி. ஸ்டப்ஸ், ஜே. ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கருண் நாயர், கே.எல். யாதவ், ஏ.ஆர். சர்மா, அக்சர் படேல் (கேப்டன்), முகேஷ் குமார், மிட்செல் ஸ்டார்க், எம்.எம். சர்மா
பிட்ச் ரிப்போர்ட்
இங்குள்ள மேற்பரப்பு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும், மேலும் நிறைய ரன்கள் கிடைக்கும். இரு அணிகளும் இந்த மைதானத்தில் சேஸிங் செய்வதையே விரும்புவார்கள்.
கவனிக்க வேண்டிய பிளேயர்ஸ்
சாய் சுதர்சன்: இந்த இளம் வீரர் தற்போது போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார், ஆறு போட்டிகளில் 54.83 என்ற சராசரியுடன் 329 ரன்கள் எடுத்துள்ளார். குஜராத்தின் கடைசி போட்டியில், சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்.
மிட்செல் ஸ்டார்க்: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிசி அணியை அவர்களின் கடைசி போட்டியில் ஒரு த்ரில்லிங் வெற்றிக்கு அழைத்துச் சென்றார், ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அகமதாபாத் பாதையில் அவர் எப்படி மாறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நேருக்கு நேர்
இதுவரை இரு அணிகளும் 5 மேட்ச்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. குஜராத் 2 ஆட்டங்களிலும் டெல்லி கேபிடல்ஸ் 3 ஆட்டங்களிலும் ஜெயித்துள்ளன.
வானிலை நிலவரம்
சனிக்கிழமை பிற்பகலில் அகமதாபாத்தில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் 16% மட்டுமே இருக்கும், மழை பெய்ய வாய்ப்பில்லை.
