ஐபிஎல் 2025: தோல்வியில் இருந்து வெற்றி பாதைக்கு திரும்பபோவது யார்? பலப்பரிட்சை செய்யும் DC vs RR
ஐபிஎல் 2025: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த ஸ்கோர் அடித்து அதை எதிரணியை அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ். கொலகத்தா நைட் ரைடர்ஸ் 112 ரன்கள் சேஸ் செய்ய முடியாமல் 16 ரன்களில் தோல்வியை தழுவியுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 32வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கும் முன் டெல்லி கேபிடல்ஸ் 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் தனது முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முந்தைய போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியுற்றது.
இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கும் திரும்பும் விதமாக இந்த போட்டி அமைகிறது.
ஸ்டார் வீரர்கள்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் போரல், கேஎல் ராகுல், அசுடோஷ் ஷர்மா, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் உள்ளனர். கடந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கருண் நாயர் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் பவுலிங்கில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓபனர் மெக்குர்க் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெயஸ்வால், ரியான் பிராக், துருவ் ஜூர், ஷிமரான் ஹெட்மேயர் நல்ல பார்மில் உள்ளார்கள். சஞ்சு சாம்சன் பெரிய இன்னிங்ஸ் வெளிப்படுத்தாமல் இருந்து வரும் நிலையில், அவரது ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாக உள்ளது. பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சிர், தீக்சனா, வானிந்து ஹசரங்கா, சந்தீப் ஷர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படுவதால் இந்த ஆட்டம் சூடு பிடிக்கும் விதமாக இருக்கும் என்ற தெரிகிறது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும். ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றால் 6 அல்லது 7வது இடத்துக்கு முன்னேறலாம்.
டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை
இந்த இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி கேபிடல்ஸ் 14, ராஜஸ்தான் ராயல்ஸ் 15 முறை வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் கடைசியாக மோதிக்கொண்ட போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் நிலவரம்
டெல்லி மைதானம் பேட்ஸ்மேன்களில் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. இன்று நடைபெறும் போட்டியிலும் பேட்ஸ்மேன்களே ஜொலிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பவுலர்களில் ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் உத்தேச அணி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, அக்சர் படேல் (கேப்டன்), விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், மோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் உத்தேச அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மேயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, குமார் கார்த்திகேயா
