ஐபிஎல் 2025: அடுத்தடுத்து மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடி.. டெல்லி பவுலர்களுக்கு எதிராக 10 சிக்ஸர்கள்.. கடின இலக்கு
ஐபிஎல் 2025: ரோஹித் ஷர்மா தவிர டாப் மூன்று பேட்ஸ்மேன்கள் அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தி பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். மிடில் ஆர்டரில் நமன் தீர் நல்ல பினிஷிங்கை கொடுத்த டெல்லி கேபிடல்ஸ்க்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

ஐபிஎல் 2025 தொடரின் 29வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. டெல்லி உள்ளூர் மைதானமான இங்கு இந்த சீசனில் நடைபெறும் முதல் போட்டியாக இது அமைகிறது.
இந்த போட்டி தொடங்கு முன் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி, நான்கு தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது
டெல்லி கேபிடல்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக வெற்றியை பெற்றது. மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராகவே விளையாடியுள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் இன்னும் ஒரு தோல்வியை கூட பெறாத நிலையில், வலுவான அணியாக டாப் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே கூட்டணியுடன் விளையாடுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக திலக் வர்மா 50, ரயான் ரிக்கெல்டன் 41, சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் அடித்துள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் பவுலர்களில் விப்ராஜ் நிகாம், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகேஷ் குமார் ஒரு விக்கெட் எடுத்தார்.
ரோஹித் ஷர்மா தடுமாற்றம்
இந்த சீசனில் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காமல் இருந்து வரும் ரோஹித் ஷர்மா ஆட்டம் இந்த போட்டியில் தொடர்கதை ஆகியுள்ளது. வழக்கம் போல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய ரோஹித் ஷர்மா, 12 ரன்களில் 18 ரன்கள் எடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ரோஹித்தின் தடுமாற்றம் ஆறாவது போட்டியாக தொடர்ந்து வருகிறது.
திலக் வர்மா அதிரடி
பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் 59 ரன்கள் அடித்து ஒரு விக்கெட்டை இழந்தது. ஓபனராக ரோஹித்துடன் களமிறங்கிய ரிகெல்டன் அதிரடியில் மிரட்டிய நிலையில் 25 பந்துகளில் 41 ரன்கள் அடித்து விட்டு அவுட்டானர்.
இவை தொடர்ந்து பேட் செய்த வந்த சூர்யகுமார் யாதவ், தன் பங்குக்கு விரைவாக ரன்களை சேர்த்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஆகியோர் 60 ரன்கள் சேர்த்தனர். 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்த சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டார்க் வசம் சிக்கினார்.
களத்தில் சூர்யகுமாருடன் இணைந்து பவுண்டரி, சிக்ஸர்களை அடித்து ரன்களை குவித்து வந்த திலக் வர்மா 26 பந்துகளில் அரைசதமடித்தார். இந்த சீசனில் இவர் அடிக்கும் இரண்டாவது அரைசதமாக இது அமைந்தது. 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் அடித்த திலக் வர்மா ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
நமன் தீர் பினிஷ்
கடைசி கட்ட ஓவர்களில் திலக் வர்மாவுடன் இணைந்து நமர் தீர் நல்ல பினிஷிங்கை கொடுத்தார். இந்த ஜோடி கடைசி 6.5 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்தது.
டெல்லி பவுலர்களுக்கு எதிராக ரன்வேட்டையில் ஈடுபட்ட நமன் தீர் பந்துகளில் ரன்கள் அடித்தார். தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் கடைசி 10 ஓவரில் 111 ரன்களை எடுத்து கூடுதலாக 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
பலத்த அடி வாங்கிய பவுலர்கள்
டெல்லி கேபிடல்ஸ் பவுலர்களில் குல்தீப் யாதவ் கட்டுப்பாடுடன் பந்து வீசினார். 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பவுலர்கள் அனைவரும் 30 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.
ஸ்டார்க் 3 ஓவரில் 43, மோஹித் ஷர்மா 3 ஓவரில் 40 ரன்கள் என மிக மோசமாக பவுலிங் செய்துள்ளனர்.
