ஐபிஎல் 2025: மூன்று விருதுகளை வென்ற சாய் சுதர்சன்.. ஆரஞ்சு, பர்ப்பிள் தொப்பி வெற்றியாளர் யார்? முழு லிஸ்ட் இதோ
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர்சிபி அணி. அத்துடன் இந்த சீசனில் பல்வேறு சாதனைகள், ஆட்டத்திறன்களை வெளிப்படுத்தி ஐபிஎல் 2025 தொடருக்கான பல்வேறு பரிசுகளை வென்ற வீரர்களின் முழு பட்டியலை பார்க்கலாம்

ஐபிஎல் 2025 சீசன், மறக்கமுடியாத இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதுடன் முடிவுக்கு வந்துள்ளது. பைனல் போட்டியில் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பான தற்காப்பு பந்து வீச்சை வெளிப்படுத்திய க்ருணால் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் இரண்டாவது முறையாக அவர் இந்த விருதை வென்றவர் என்ற பெருமை பெற்றார்.
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதர் ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பையை உயர்த்தினார். ஐபிஎல் 2025 தொடரில் நடைபெற்ற மொத்தம் 74 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தனிநபர், அணி விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி ஐபிஎல் 2025 நிறைவு விழாவில் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்கள், அணிகள் பெற்ற விருதுகளின் மொத்த பட்டியலை பார்க்கலாம்