ஐபிஎல் 2025: ஆர்யா, இங்கிலீஸ் அதிரடி.. மும்பையை வீழ்த்தி டாப் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்
மும்பை பவுலர்களுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் பேட்ஸ்மேன்களான பிரியான்ஷ் ஆர்யா - ஜோஸ் இங்கிலீஸ் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். மும்பையை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 69வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 13 போட்டிகளில் விளையாடி 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் 13 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தை பிடிக்கும்.
டாப் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் தான் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடி நேரடியாக இறுதிப்போட்டி விளையாடும் வாய்பை பெறும். இந்த சீசனில் தங்களது கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது. அத்துடன் ஐபிஎல் 2025 தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலாக இந்த போட்டி அமைந்திருந்தது.
