ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு இன்னொரு தோல்வி! வெற்றியுடன் சீசனை பினிஷ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடி இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் அணி வெற்றியுடன் சீசனை முடித்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 62வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 12 போட்டிகள், 3 வெற்றி, 9 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலும் இருந்தது.
சிஎஸ்கே தனது முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயஸ்ஸ் இடையிலான முதல் மோதலில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது மோதலில் சிஎஸ்கே பதிலடி தருமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபருக்கிக்கு பதிலாக யுத்வீர் சிங் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 187 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
