ஐபிஎல் 2025: மாத்ரே, பிரெவீஸ் அதிரடி.. பேட்டிங்கில் தடுமாறிய தோனி.. பினிஷிங்கில் சொதப்பிய சிஎஸ்கே
பவர்ப்ளே ஓவரில் ஆயுஷ் மாத்ரே, மிடில் ஓவர்களில் டெவால்ட் பிரெவீஸ் அதிரடிகாட்ட நங்கூர இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஷிவம் துபே மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் நல்ல பினிஷிங்கை கொடுத்தனர். ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடியை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி

ஐபிஎல் 2025 தொடரின் 62வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்க வேண்டிய இந்த போட்டி ஐபிஎல் புதிய அட்டவணை காரணமாக டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த போட்டி தொடங்கும் முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 12 போட்டிகள், 3 வெற்றி, 9 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே தனது முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவியது. அந்த அணிக்கு இந்த சீசனின் கடைசி போட்டியாக அமைந்துள்ளது. சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயஸ்ஸ் இடையிலான முதல் மோதலில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், அதற்கு சிஎஸ்கே பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது.
