ஐபிஎல் 2025: திணறடித்த குஜராத் பவுலர்கள்.. ஒற்றை இலக்கத்தில் 5 பேர் அவுட்! மும்பையை கரை சேர்த்த வில் ஜாக்ஸ், சூர்யகுமார்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: திணறடித்த குஜராத் பவுலர்கள்.. ஒற்றை இலக்கத்தில் 5 பேர் அவுட்! மும்பையை கரை சேர்த்த வில் ஜாக்ஸ், சூர்யகுமார்

ஐபிஎல் 2025: திணறடித்த குஜராத் பவுலர்கள்.. ஒற்றை இலக்கத்தில் 5 பேர் அவுட்! மும்பையை கரை சேர்த்த வில் ஜாக்ஸ், சூர்யகுமார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 06, 2025 09:44 PM IST

குஜராத் பவுலர்கள் அபார பந்து வீச்சின் மூலம் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். மிடில் ஓவரில் வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் பார்டனர்ஷிப் அமைத்த நிலையில், கோஸ் நல்ல பினிஷங்கை கொடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 155 ரன்கள் எடுத்து கரை சேர்ந்துள்ளது.

திணறடித்த குஜராத் பவுலர்கள்.. ஒற்றை இலக்கத்தில் 5 பேர் அவுட்! மும்பையை கரை சேர்த்த வில் ஜாக்ஸ், சூர்யகுமார்
திணறடித்த குஜராத் பவுலர்கள்.. ஒற்றை இலக்கத்தில் 5 பேர் அவுட்! மும்பையை கரை சேர்த்த வில் ஜாக்ஸ், சூர்யகுமார் (Surjeet Yadav)

மும்பை இந்தியன்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. குஜராத் டைட்டன்ஸ் முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ்க்கு எதிராக வெற்றி பெற்றது. இரு அணிகளும் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், டாப் 2 இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் களமிறங்கியுள்ளன.

இந்த சீசனில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலில் குஜராத் வெற்றி பெற்றது. எனவே மும்பை இந்தியன்ஸ் இந்த முறை குஜராத்தை பழிதீர்க்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது. குஜராத் அணியில் அர்ஷத் கான், ககிசோ ரபாடா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குஜராத் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 53, சூர்யகுமார் யாதவ் 35, கோஸ் 27 ரன்கள் எடுத்துள்ளனர்.

குஜராத் பவுலர்களில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஷித் கான், ஜெரால்ட் கோட்சி, முகமது சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

மும்பை இந்தியன்ஸ் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளிக்கும் இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். குஜராத் பவுலர்களின் டாப் கிளாஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். ரியான் ரிக்கெல்டன் 2, ரோஹித் ஷர்மா 7, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா 1, நமன் திர் 7 என ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர்.

வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் பார்ட்னர்ஷிப்

மும்பை பேட்ஸ்மேன்களில் வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே நிதானமும், அதிரடியும் கலந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர்.

5 பவுண்டரி, 3 சிக்ஸர் என அதிரடி காட்டிய வில் ஜாக்ஸ் 35 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ரஷித் கான் பந்தில் வீழ்ந்தார். இதேபோல் சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து அவுட்டானார்.

கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய கார்பின் போஸ் 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

குஜராத் பவுலர்கள் அபாரம்

குஜராத் பவுலர்களில் ஸ்பின்னர்களான சாய் கிஷோர், ரஷீத் கான் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நல்ல நெருக்கடியை தந்தனர். சாய் கிஷோர் 4 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஷித் கான் 4 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களில் அர்ஷத் கான் 3 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவரில் 37 ரன்கள் என அதிகமாக வாரி வழங்கியபோதிலும், இவர்தான் அதிகபட்சமாக 10 டாட் பந்துகளை வீசியுள்ளார். அத்துடன் அர்ஷத் கானும் 10 டாட் பந்துகளை வீசினர்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.