ஐபிஎல் 2025: ப்ளேஆஃப் ரேஸ்.. ரன் குவிக்க திணறிய பேட்ஸ்மேன்கள்! 133 ரன்களில் டெல்லி கேபிடல்ஸை கட்டுப்படுத்திய சன் ரைசர்ஸ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ப்ளேஆஃப் ரேஸ்.. ரன் குவிக்க திணறிய பேட்ஸ்மேன்கள்! 133 ரன்களில் டெல்லி கேபிடல்ஸை கட்டுப்படுத்திய சன் ரைசர்ஸ்

ஐபிஎல் 2025: ப்ளேஆஃப் ரேஸ்.. ரன் குவிக்க திணறிய பேட்ஸ்மேன்கள்! 133 ரன்களில் டெல்லி கேபிடல்ஸை கட்டுப்படுத்திய சன் ரைசர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 05, 2025 09:42 PM IST

டெல்லி கேபிடல்ஸ் முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பில் திணறிய நிலையில், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், இம்பேக்ட் வீரராக வந்த அசுடோஷ் ஷர்மா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் டெல்லி கேபிடல்ஸ் 133 ரன்கள் எடுத்துள்ளது

ப்ளேஆஃப் ரேஸ்.. ரன் குவிக்க திணறிய பேட்ஸ்மேன்கள்! 133 ரன்களில் டெல்லி கேபிடல்ஸை கட்டுப்படுத்திய சன் ரைசர்ஸ்
ப்ளேஆஃப் ரேஸ்.. ரன் குவிக்க திணறிய பேட்ஸ்மேன்கள்! 133 ரன்களில் டெல்லி கேபிடல்ஸை கட்டுப்படுத்திய சன் ரைசர்ஸ் (AP)

டெல்லி கேபிடல்ஸ் 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக தோல்வியை தழுவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் தோல்வியுற்றது.

இந்த போட்டியுடன் இனி விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றியை பெற்றால் சன் ரைசர்ஸ் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை பெறலாம். அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பை பலப்படுத்தி கொள்ளலாம். எனவே இரு அணிகளுக்கும் முக்கியத்துவமான போட்டியாக இது அமைந்துள்ளது. அத்துடன் இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வி அடைந்திருப்பதால் அதிலிருந்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய முனைப்பில் களமிறங்கியுள்ளன.

சன் ரைடசர்ஸ் அணி அதே அணியுடன் களமிறங்கியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன் ரைசர்ஸ் பவுலிங்

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 41, அசுடோஷ் ஷர்மா 41 ரன்கள் எடுத்துள்ளனர்.

சன் ரைசர்ஸ் பவுலர்களில் பாட் கம்மின்ஸ 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உனத்கட், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

டாப் ஆர்டர் சரிவு

சன் ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கருண் நாயர் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் சிக்கி டக் அவுட்டானார். இதைத்தொடர்ந்து டூ பிளெசிஸ் 3, அபிஷேக் போரல் 8, கேஎல் ராகுல் 10, அக்சர் படேல் 6 என அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

பவர்ப்ளே ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் மட்டுமே குவித்தது.

ஸ்டப்ஸ் நிதானம்

30 ரன்கள் அடிப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியை தனது நிதான ஆட்டத்தின் மூலம் மீட்டெடுத்தார் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ். இவருடன் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்த விப்ராஜ் நிகம் 18 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார்.

இதற்கிடையே பொறுப்புடன் பேட் செய்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார்.

தாக்கம் ஏற்படுத்திய அசுடோஷ் ஷர்மா

கடைசி கட்டத்தில் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட அசுடோஸ் ஷர்மா, கொஞ்சம் அதிரடி காட்டி கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்த அசுடோஷ் ஷர்மா 26 பந்துகளில் 46 ரன்கள் அடித்து டெல்லி கேபிடல்ஸ் கெளரவமான ஸ்கோர் குவிக்க உதவினார்.

துல்லிய பவுலிங்

ஆரம்பத்தில் இருந்தே டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மன்களுக்கு நெருக்கடி தந்தனர் சன் ரைசர்ஸ் பவுலர்கள். முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அழுத்தம் கொடுத்தார்.

இன்னொரு வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் டெல்லி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினார். கம்மின்ஸ் 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அதிகபட்சமாக 14 டாட் பந்துகளை வீசினார்.

உனத்கட் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 11 டாட் பந்துகளை வீசினார். இவரது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை.

சன் ரைசர்ஸ் பவுலர்களில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.