ஐபிஎல் 2025: ப்ளேஆஃப்புக்கான ரேஸில் முந்தப்போவது யார்? பஞ்சாப்பை பழிதீர்க்குமா லக்னோ?ஷ்ரயோஸ் vs பந்த் இடையே இன்று மோதல்
ப்ளேஆஃப் வாய்ப்பு பெறுவதற்கான முக்கிய போட்டியாக பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி அமைந்துள்ளது. முந்தைய மோதலில் பெற்ற தோல்விக்கு பஞ்சாப் அணியை பழிதீர்க்கும் முனைப்பிலும் லக்னோ அணி களமிறங்குகிறது.

ப்ளேஆஃப்புக்கான ரேஸில் முந்தப்போவது யார்? பஞ்சாப்பை பழிதீர்க்குமா லக்னோ?ஷ்ரயோஸ் vs பந்த் இடையே இன்று மோதல் (Surjeet)
ஐபிஎல் 2025 தொடரின் 54வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தரம்சாலாவில் நடைபெற இருக்கிறது. இந்த சீசனில் தரம்சாலாவில் நடைபெற இருக்கும் முதல் போட்டியாக இது அமைகிறது. இன்றைய நாளில் இரண்டாவது போட்டியாகவும் விளையடப்பட இருக்கிறது.
இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஒரு போட்டி முடிவு இல்லாமல் போனது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.