ஐபிஎல் 2025: க்ருனால் அதிரடி.. டெல்லிக்கு பதிலடி.. புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு சென்ற ஆர்சிபி
ப்வர்ப்ளே முடிவதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அவுட்டாகமல் இருந்த கோலி ஒரு புறம் நிதானம் காட்ட, மறுபுறத்தில் க்ருனால் அதிரடியில் மிரட்டினார். கடைசியில் டிம் டேவிட் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தி டெல்லிக்கு பதிலடி கொடுத்த ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் டாப் இடம் சென்றுள்ளது.
க்ருனால் அதிரடி.. டெல்லிக்கு பதிலடி.. புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு சென்ற ஆர்சிபி (REUTERS)
ஐபிஎல் 2025 தொடரில் 46வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி என புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திலும், ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலும் இருந்தது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய மோதலில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. எனவே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பதிலடி தரும் போட்டியாக ஆர்சிபிக்கு இது அமைந்துள்ளது.
இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் டூ பிளெசிஸ் அணிக்கு மீண்டும் திரும்பினார். ஆர்சிபி அணியில் ஓபனர் சால்ட்க்கு பதிலாக ஜேக்கப் பீதல் சேர்க்கப்பட்டார்.
