ஐபிஎல் 2025: Local boy கோலியின் உள்ளூர் மைதானம்.. எகிறும் எதிர்பார்ப்பு.. டெல்லியை பழிதீர்க்க காத்திருக்கும் ஆர்சிபி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: Local Boy கோலியின் உள்ளூர் மைதானம்.. எகிறும் எதிர்பார்ப்பு.. டெல்லியை பழிதீர்க்க காத்திருக்கும் ஆர்சிபி

ஐபிஎல் 2025: Local boy கோலியின் உள்ளூர் மைதானம்.. எகிறும் எதிர்பார்ப்பு.. டெல்லியை பழிதீர்க்க காத்திருக்கும் ஆர்சிபி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 27, 2025 06:30 AM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பெங்களுரு மைதானத்தில் பெற்றி தோல்விக்கு பழிதீர்க்க காத்திருக்கிறது ஆர்சிபி அணி. அத்துடன், இன்று நடைபெறும் போட்டி விராட் கோலியின் உள்ளூர் மைதானமான டெல்லியில் நடைபெற இருப்பதால் அவரது இன்னிங்ஸ் மீது வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது

Local boy கோலியின் உள்ளூர் மைதானம்.. எகிறும் எதிர்பார்ப்பு.. டெல்லியை பழிதீர்க்க காத்திருக்கும் ஆர்சிபி
Local boy கோலியின் உள்ளூர் மைதானம்.. எகிறும் எதிர்பார்ப்பு.. டெல்லியை பழிதீர்க்க காத்திருக்கும் ஆர்சிபி (Surjeet Yadav)

டெல்லி கேபிடல்ஸ் தனது முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆர்சிபி அணி முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய மோதலில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் முந்தைய போட்டியில் வெற்றி பெற்று டாப் 4 இடங்களில் இருந்து வரும் நிலையில், அந்த வெற்றி பயணத்தை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என எதிர்பார்க்கலாம்

ஸ்டார் வீரர்கள்

டெல்லி கேபிடல்ஸ் அணியில் அபிஷேக் போரல், கேஎல் ராகுல், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுடோஷ் ஷர்மா நல்ல பார்மில் உள்ளனர். பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆர்சிபி அணியில் விராட் கோலி, சால்ட், படிக்கல், பட்டிதார் பேட்டிங்கில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார்கள். பவுலிங்கில் ஜோஷ் ஹசில்வுட் திருப்புமுனையை ஏற்படுத்துபவராக திகழ்கிறார். இன்று நடைபெறும் போட்டி விராட் கோலியின் உள்ளூர் மைதானமான டெல்லியில் நடைபெற இருப்பதால் அவரது இன்னிங்ஸ் மீது வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே Local boyயாக இருந்து வரும் கோலியின் இன்னிங்ஸ் கவனம் பெறும் என தெரிகிறது.

டெல்லி - ஆர்சிபி இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை 32 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அணி 19, டெல்லி கேபிடல்ஸ் 12 போட்டிகளில் வெற்றிகள் பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை. இரு அணிகளுக்கு இடையே கடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான மோதலில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லி மைதானத்தில் நடந்த இரண்டு ஆட்டங்களிலும் அதிக ஸ்கோரிங் இருந்தது, ஆனால் பந்தை மேலே தூக்கி வீசிய குல்தீப் மற்றும் விப்ராஜ் நிகாம் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் 10.2 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில், ஸ்பின் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு 9.1 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பனி பெய்ய வாய்ப்புள்ளதால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஒரு பெரிய ஸ்கோர் தேவைப்படும். இரு அணிகளும் சமமாக இருப்பதால், சம ஸ்கோரை கணிப்பது எளிதல்ல. டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் உத்தேச அணி: அபிஷேக் போரல், ஃபாஃப் டு பிளெசிஸ், கருண் நாயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), 5 அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்,

இம்பேக்ட் வீரர்: துஷ்மந்தா சமீரா

ஆர்சிபி உத்தேச அணி: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹசில்வுட், யாஷ் தயாள்

இம்பேக்ட் வீரர்: சுயாஷ் ஷர்மா

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.