ஐபிஎல் 2025: ஓபனிங், மிடில் ஓவர், பினிஷ்ங்கில் விடாது அதிரடி காட்டிய மும்பை பேட்ஸ்மேன்கள்.. லக்னோவுக்கு சவாலான இலக்கு
ஓபனிங்கில் ரிக்கெல்டன், மிடில் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ், கடைசி கட்டத்தில் நமன் திர் மற்றும் போஷ் ஆகியோர் அதிரடி காட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 45வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - லக்னோ ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன்பு மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 6வது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய மோதலில் லக்னோ அணி வெற்றி பெற்றது. எனவே அந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கார்பின் போஷ், கரன் ஷர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
