IPL 2023 Most Maidens: இந்தியன் ப்ரீமியர் லீக்கில் கடந்த சீசனில் மெய்டன் ஓவர்கள் வீசிய டாப் 5 பவுலர்ஸ் லிஸ்ட் இதோ
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl 2023 Most Maidens: இந்தியன் ப்ரீமியர் லீக்கில் கடந்த சீசனில் மெய்டன் ஓவர்கள் வீசிய டாப் 5 பவுலர்ஸ் லிஸ்ட் இதோ

IPL 2023 Most Maidens: இந்தியன் ப்ரீமியர் லீக்கில் கடந்த சீசனில் மெய்டன் ஓவர்கள் வீசிய டாப் 5 பவுலர்ஸ் லிஸ்ட் இதோ

Manigandan K T HT Tamil
Mar 14, 2024 06:00 AM IST

IPL Most Maidens: குஜராத் டைட்டன்ஸ் பைனலுக்கு முன்னேறுவதற்கு முக்கியப் பங்களித்ததுடன் அதிக விக்கெட்டுகளையும் எடுத்து பர்ப்பிள் கேப்பை வசப்படுத்தியிருந்தவரான முகமது ஷமி இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் மொத்தம் 17 மேட்ச்களில் விளையாடி 522 ரன்களை விட்டுக் கொடுத்து 28 விக்கெட்டுகளை சுருட்டினார்.

முகமது ஷமி, கலீல் அகமது, டிரெண்ட் போல்ட்
முகமது ஷமி, கலீல் அகமது, டிரெண்ட் போல்ட் (HT)

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பேட்டிங் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு பந்துவீச்சும் மிக மிக முக்கியம் ஆகும்.

துல்லியமான பந்துவீச்சால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். அதுவும் விக்கெட் எடுக்காவிட்டாலும் கூட ரன்கள் எதுவும் கொடுக்காமல் மெய்டன் ஓவர்களை சரியான தருணங்களில் வீசும் பவுலர்கள் அந்த அணியால் கொண்டாடப்படுவார்கள்.

உதாரணத்திற்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டும் அல்லது 8 ரன்கள் அல்லது 6 ரன்களே எடுக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். ஆனால், கடைசி ஓவரில் ஒரு ரன் கூட எடுக்க முடியாத வகையில் பேட்ஸ்மேனுக்கு பந்துவீசும் பவுலர் இருந்தால் எப்படி இருக்கும்.

இதுபோல், பல ஓவர்களில் மெய்டன் ஓவர்களை வீசி எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படும் பவுலர்களுக்கான கிராக்கி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக ரன் மெஷின்கள் போன்று விளையாடும் பேட்ஸ்மேன்கள் இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர்களை ரன்னே எடுக்க விடாமல் செய்ய முடிகிறது என்றால் அது பாராட்டுக்குரிய ஒன்றுதானே!

அப்படி கடந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் மெய்டன் ஓவர்களை வீசிய பந்துவீச்சாளர்கள் பட்டியலைப் பார்ப்போம் வாங்க.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ட்ரெண்ட் போல்ட்.

ட்ரெண்ட் போல்ட்

நியூசிலாந்தைச் சேர்ந்தவரான ட்ரெண்ட் போல்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த சீசனில் பந்துவீசினார். 10 மேட்ச்களில் அவர் 38 ஓவர்களை வீசினார். அதில் 3 ஓவர்கள் மெய்டன்களாக வீசினார். மொத்தம் 312 ரன்களை விட்டுக் கொடுத்தார். 13 விக்கெட்டுகளை அள்ளினார்.

முகமது ஷமி

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் பைனலுக்கு முன்னேறுவதற்கு முக்கியப் பங்களித்ததுடன் அதிக விக்கெட்டுகளையும் எடுத்து பர்ப்பிள் கேப்பை வசப்படுத்தியிருந்தவரான முகமது ஷமி இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் மொத்தம் 17 மேட்ச்களில் விளையாடி 522 ரன்களை விட்டுக் கொடுத்து 28 விக்கெட்டுகளை சுருட்டினார். மொத்தம் 2 மெய்டன் ஓவர்களை வீசியிருக்கிறார். இவர் வீசிய ஓவர்களின் எண்ணிக்கை 65 என்பது குறிப்பிடத்தக்கது.

கலீல் அகமது

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக பந்துவீசிய கலீல் அகமது 9 மேட்ச்களில் ஆடினார். அவர் 33 ஓவர்களை வீசி 301 ரன்களை எதிரணிகளுக்கு விட்டுக் கொடுத்தார். மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்த அவர், 2 மெய்டன் ஓவர்களை வீசி அசத்தினார்.

டேவிட் வில்லீ

இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் வில்லீ ஆர்சிபி அணிக்காக கடந்த சீசனில் விளையாடினார். மொத்தம் 4 மேட்ச்களில் விளையாடிய அவர், 15 ஓவர்களை வீசினார். 1 மெய்டன் ஓவரை வீசினார். மொத்தம் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இவர் ஆல்-ரவுண்டர் ஆவார்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ் சுழல் மன்னன் ஆச்சே. இவர் மொத்தம் 14 மேட்ச்களில் கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். மொத்தம் 49 ஓவர்களை வீசி 361 ரன்களை விட்டுக் கொடுத்தார். 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், 1 மெய்டன் ஓவரை வீசினார்.

அடுத்தடுத்த இடங்களில் சிஎஸ்கே வீரர் மஹீஷ் தீக்ஷனா, லக்னோ வீரர் மார்க் வுட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்ரவர்த்தி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் புவனேஸ்வர் குமார், டெல்லி பவுலர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். இவர் முறையே 1 மெய்டன் ஓவரை வீசினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.