Tamil News  /  Cricket  /  India Vs Srilanka Final Live Score Asia Cup 2023 Todays Match Scorecard Commentary Live News Updates In Tamil

India Vs Sri Lanka Asia Cup 2023 Final: இந்தியா-இலங்கை மோதும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி

India Vs Sri Lanka Asia Cup 2023 Final Live: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

03:46 PM ISTHT Tamil Desk
  • Share on twitter
  • Share on Facebook
03:46 PM IST

India Vs Sri Lanka Asia Cup 2023 Final Match Update: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. போட்டியின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை இங்கு காணலாம்.

Sun, 17 Sep 202312:37 PM IST

இந்தியா சாம்பியன்

ஆசிய கோப்பை 2023 இல் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.

Sun, 17 Sep 202312:25 PM IST

3 ஓவர்களில் இந்திய அணி 32 ரன்கள்

3 ஓவர்களில் 32 ரன்கள் சேர்த்தது இந்தியா.

Sun, 17 Sep 202312:13 PM IST

இந்தியா இன்னிங்ஸ் தொடக்கம்

ஓபனிங் பேட்ஸ்மேன்களாக கில்-கிஷன் கூட்டணி களமிறங்கியுள்ளது.

Sun, 17 Sep 202311:57 AM IST

15.2 ஓவர்களில் முடிவுக்கு வந்த ஆட்டம்

15.2 ஓவர்களில் முடிவுக்கு வந்தது இலங்கை ஆட்டம்.

Sun, 17 Sep 202311:40 AM IST

51 ரன்கள் இந்தியாவுக்கு இலக்கு

இலங்கை ஆல் அவுட். 51 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும்.

Sun, 17 Sep 202311:39 AM IST

இலங்கை 50/9

மதுஷனும் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு இது 2வது விக்கெட் ஆகும். இலங்கை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Sun, 17 Sep 202311:23 AM IST

ஹர்திக் பாண்டியாவுக்கு விக்கெட்

இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்களில் தடுமாறி வருகிறது. ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டை தூக்கினார்.

Sun, 17 Sep 202311:14 AM IST

மென்டிஸ் விக்கெட்டையும் காலி செய்தார் சிராஜ்

குசால் மென்டிஸ் விக்கெட்டையும் எடுத்தார் முகமது சிராஜ். இன்றைய ஆட்டத்தில் சிராஜுக்கு இது 6வது விக்கெட் ஆகும்.

Sun, 17 Sep 202311:07 AM IST

10 ஓவர்கள் முடிவில்…

10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.

Sun, 17 Sep 202310:59 AM IST

16 பந்துகளில் 5 விக்கெட்டுகள்

16 பந்துகளில் 5 விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனையைப் படைத்தார் முகமது சிராஜ். 

Sun, 17 Sep 202310:46 AM IST

இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்தது

சிராஜுக்கு மீண்டும் விக்கெட். முகமது சிராஜ் வீசிய பந்து போல்டு ஆனது. கேப்டன் ஷனகாவும் ஆட்டமிழந்தனர்.

Sun, 17 Sep 202310:33 AM IST

முகமது சிராஜுக்கு 3வது விக்கெட்

இலங்கை அடுத்த விக்கெட்டையும் இழந்தது. 

Sun, 17 Sep 202310:31 AM IST

இலங்கை 3 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்

இலங்கை 3வது விக்கெட்டை இழந்து. முகமது சிராஜுக்கு ஒரே ஓவரில் அடுத்த விக்கெட்டையும் பறிகொடுத்தது.

Sun, 17 Sep 202310:26 AM IST

சிராஜ் எடுத்து முதல் விக்கெட்

முகமது சிராஜ் வீசிய பந்தை அடித்த முயன்ற நிசாங்கா ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.

Sun, 17 Sep 202310:13 AM IST

குசால் பெரேரா அவுட்

முதல் ஓவரிலேயே விக்கெட்.. பும்ரா அசத்தல் பவுலிங். குசால் பெரோரா கேட்ச் ஆகிய நடையைக் கட்டினார்.

Sun, 17 Sep 202310:05 AM IST

தார்ப்பாய்கள் அகற்றம்

லேசான மழை நின்றதை அடுத்து, தார்ப்பாய்கள் மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டன. இந்திய வீரர்கள் வார்ம்-அப் செய்து வருகின்றனர்.

Sun, 17 Sep 202309:55 AM IST

கள ஆய்வு

3.30 மணிக்கு கள ஆய்வு தொடங்குகிறது.

Sun, 17 Sep 202309:50 AM IST

போட்டித் தொடங்குவது எப்போது?

3.45 மணிக்கு போட்டி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sun, 17 Sep 202309:38 AM IST

போட்டித் தொடங்குவதில் தாமதம்

கொழும்பில் மழை பெய்து வருகிறது. இதனால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Sun, 17 Sep 202309:25 AM IST

மழை வர வாய்ப்பு

மழை வருவது போல் இருப்பதால், தார்ப்பாய் கொண்டு மைதானம் மூடப்பட்டுள்ளது.

Sun, 17 Sep 202309:19 AM IST

இந்தியா பிளேயிங் லெவன்

ரோஹித், கில், கோலி, இஷான், ராகுல், ஹர்திக், ஜடேஜா, சுந்தர், குல்தீப், சிராஜ், பும்ரா.

Sun, 17 Sep 202309:01 AM IST

இலங்கை பேட்டிங்

இலங்கை அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியா முதலில் ஃபீல்டிங் செய்யவுள்ளது.

Sun, 17 Sep 202308:42 AM IST

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஸ்பெஷல் டே

இந்திய கேப்டன் ரோகித் சர்மா இன்று 250வது ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.

Sun, 17 Sep 202308:00 AM IST

ஆசிய கோப்பை வெற்றி விபரம்

ஆசிய கோப்பை அரங்கில் இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை சாம்பியன் ஆனது. இலங்கை அணி 6 முறை கோப்பை வென்றுள்ளது.

Sun, 17 Sep 202307:48 AM IST

மைதானத்தில் மேக மூட்டம்! 

போட்டியை காண மக்கள் கூடிய நிலையில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மழை இல்லை. 

Sun, 17 Sep 202307:34 AM IST

சிம்ம சொப்பனமாக இருக்கும் மகேஷ் தீக்‌ஷனா

இந்த ஆண்டில் குல்தீப் யாதவ் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது. ஆனால் இலங்கை பக்கம் மகேஷ் தீக்‌ஷனா இருப்பது இந்தியாவிற்கு கடுமையான நெருக்கடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Sun, 17 Sep 202307:14 AM IST

வெப்பநிலை சீராக இருக்கிறது.

இந்தியா - இலங்கை போட்டியில் மழை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அங்கு வானிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Sun, 17 Sep 202306:40 AM IST

திமுத் கருணாரத்ன தேர்வு செய்யப்பட்டு இருந்தார் 

முதல் தேர்வு தொடக்க ஆட்டக்காரராக திமுத் கருணாரத்ன தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அவர் நான்கு போட்டிகளில் பெரிதாக சோபிக்காத காரணத்தால் அந்த வாய்ப்பை அவர் இழந்ததாக சொல்லப்படுகிறது.

Sun, 17 Sep 202306:27 AM IST

சுப்மன் கில் பேட்டி!

வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் உதவேகத்தை இழந்ததாக நினைக்கவில்லை

 -சுப்மன் கில் 

Sun, 17 Sep 202306:09 AM IST

இலங்கை கேப்டன் - தசுன் ஷனகா பேட்டி!

ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே நாங்கள் ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம். பந்து வீச்சில் தொடக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அப்போதுதான் விளையாட்டு எங்கள் கை வசம் வரும்!

இலங்கை கேப்டன் - தசுன் ஷனகா

Sun, 17 Sep 202305:48 AM IST

கவனம் தேவை!

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க விக்கெட்களை இந்திய வீரர்கள் வேகமாக வீழ்த்தினர். 59 ரன்களுக்கு 4 விக்கெட்களை சாய்த்தனர். ஆனால் அதன் பின்னர் பந்து வீச்சு அவ்வளவு சிறப்பானதாக இல்லை.  இதனால் அந்த அணி 265 ரன்களை அடித்தனர்.  அதனை இந்தபோட்டியில் இந்திய அணி கவனத்தில் கொள்ள வேண்டும்.

Sun, 17 Sep 202305:21 AM IST

 யார் எங்கு இறங்கினால் பலன்? 

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டாப் ஆர்டரிலும் கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் நடுவரிசையிலும் நன்றாக ஆடும் பட்சத்தில் இலங்கை அணிக்கு நெருக்கடி உருவாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது

 

 

Sun, 17 Sep 202305:04 AM IST

விளாசுவாரா ஷுப்மன்? 

கடந்த ஆட்டத்தில் 121 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில்லிடம் இருந்து பயங்கரமான விளையாட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

Sun, 17 Sep 202304:45 AM IST

இது முதல் முறை அல்ல 

இலங்கையில் பல நாடுகள் பங்கேற்கும் நிகழ்வின் இறுதிப் போட்டி இவ்வாறானதொரு முடிவை ஏற்படுத்துவது இது முதல் தடவையாக இருக்காது. 2002 இல், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், மழையால் இறுதிப் போட்டி ரத்தானதால், இந்தியாவும் இலங்கையும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன.

Sun, 17 Sep 202304:37 AM IST

ரிசர்வ் டே ரத்தானால்? 

ஆசியக் கோப்பை 2023 இறுதிப் போட்டியின் ரிசர்வ் டே நாளையும் ரத்தானால் என்ன ஆகும்?

அத்தகைய துரதிர்ஷ்டவசமான காட்சியில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

Sun, 17 Sep 202304:28 AM IST

ரிசர்வ் நாள் -  கூடுதல் விவரம் 

ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் தொடங்கினால், ஓவர்கள் குறைக்கப்பட்டு மீண்டும் மழையால் நிறுத்தப்படும், ரிசர்வ் நாளில் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கும்.

Sun, 17 Sep 202304:12 AM IST

ஆசிய கோப்பைக்கும் ரிசர்வ் டே 

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் ரிசர்வ் டே இருப்பது போல், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் செப்டம்பர் 18 (திங்கட்கிழமை) ரிசர்வ் நாள் உள்ளது. கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தை மழை பாதித்தால், கட்-ஆஃப் நேரம் வரை ஓவர்கள் குறைக்கப்படும், அதன் பிறகு ஆட்டம் ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படும் என்பதை இது குறிக்கிறது.

Sun, 17 Sep 202304:00 AM IST

மழை வருமா வராதா? 

உள்ளூர் நேரப்படி காலை 10 மணி, மதியம் 1 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்க உள்ளதால், தாமதமாக தொடங்கலாம்.

 

Sun, 17 Sep 202303:49 AM IST

சாத்தியகூறுகள் எப்படி? 

இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 54 சதவீதத்துடன் 90 சதவீத மழைப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அது மேலும் கூறுகிறது.

 

Sun, 17 Sep 202303:29 AM IST

இன்றைய ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் மழை விளையாடுமா?

அக்யூவெதரின் கூற்றுப்படி, இன்றைய கொழும்பின் வானிலை முன்னறிவிப்பு: "மேகமூட்டம்; அப்பகுதியின் சில பகுதிகளில் காலையில் இடியுடன் கூடிய மழையும் அதைத் தொடர்ந்து பிற்பகலில் ஓரிரு இடியுடன் கூடிய மழை பெய்யும்" என்கிறது. 

 

 

Sun, 17 Sep 202303:11 AM IST

அணிக்கு திரும்பும் வீரர்கள்!

விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, மொகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் 

Sun, 17 Sep 202303:01 AM IST

களமிறங்கும் சிங்கங்கள் - அனல் பறக்கப்போகும் போட்டி!

விராட் கோலி உட்பட ஓய்வு அளிக்கப்பட்ட வீரர்கள் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் போட்டி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Sat, 16 Sep 202305:02 PM IST

வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

India Vs Sri Lanka Asia Cup 2023 Final Matchநு காயம் காரணமாக விலகிய அக்‌ஷர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், இன்றைய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு

Sat, 16 Sep 202305:01 PM IST

மீண்டும் திரும்பும் வீரர்கள்

India Vs Sri Lanka Asia Cup 2023 Final Match: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அறிவிக்கப்பட்ட கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இன்று களம் காணுகின்றனர். 

Sat, 16 Sep 202305:01 PM IST

நெருக்கடியில் இந்தியா

India Vs Sri Lanka Asia Cup 2023 Final Match: தொடர் வெற்றியை சுவைத்து வந்த இந்தியா, கடைசி சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசத்துடன் தோல்வியை சந்தித்ததால், இன்றைய போட்டியில் நெருக்கடியோடு இறங்கும். 

Sat, 16 Sep 202305:00 PM IST

உற்சாகத்தில் பாகிஸ்தான்

India Vs Sri Lanka Asia Cup 2023 Final Match: பாகிஸ்தான் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இலங்கை அணி, இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. 

Sat, 16 Sep 202304:59 PM IST

கோப்பையை ஏந்தப் போவது யார்?

India Vs Sri Lanka Asia Cup 2023 Final Match: ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோத உள்ளன.

Sat, 16 Sep 202304:58 PM IST

ஆசிய சாம்பியன் யார்?

India Vs Sri Lanka Asia Cup 2023 Final Match: ஆசியக் கோப்பை 2023 ன் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி, இன்று மதியம் நடைபெற உள்ளது.