IND vs BAN Asia Cup 2023 live: 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Ban Asia Cup 2023 Live: 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி

இந்தியா-வங்கதேச அணிகள் மோதும் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் அப்டேட்

IND vs BAN Asia Cup 2023 live: 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி

05:38 PM ISTSep 15, 2023 11:08 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:38 PM IST

IND vs BAN Asia Cup 2023 live: இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதும் ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியின் இன்றைய ஆட்டத்தின் அப்டேட்டுகள் உடனுக்குஉடன்.

Fri, 15 Sep 202305:37 PM IST

வங்கதேசம் வெற்றி

இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், வங்கதேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

Fri, 15 Sep 202304:54 PM IST

இந்தியா 209/7

சுப்மன் கில் 121 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இந்தியா 209/7 ஆக உள்ளது.

Fri, 15 Sep 202304:29 PM IST

கில் சதம் விளாசல்

ஷுப்மன் கில் சதம் விளாசினார். இது இவருக்கு 5வது சதம் ஆகும்.

Fri, 15 Sep 202304:25 PM IST

ஜடேஜா அவுட்

ஜடேஜாவும் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் களம் புகுந்தார்.

Fri, 15 Sep 202304:20 PM IST

இந்த ஆண்டு 1000 ரன்கள்

2023 இல் ஒரு நாள் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் எடுத்தார் கில்.

Fri, 15 Sep 202304:17 PM IST

இன்னும் கொஞ்சம் ரன்கள் தான் தேவை

சதத்தை நெருங்குகிறார் இந்தியாவின் ஷுப்மன் கில்

Fri, 15 Sep 202304:01 PM IST

பெவிலியன் திரும்பிய சூர்ய குமார் யாதவ்

26 ரன்களில் நடையைக் கட்டினார் சூர்யகுமார் யாதவ்.

Fri, 15 Sep 202303:52 PM IST

இந்திய அணி 28.3 ஓவரில் எத்தனை ரன்கள் எடுத்துள்ளது தெரியுமா

IND vs BAN Asia Cup 2023 live: இந்திய - வங்கதேச அணிகள் மோதும் போட்டியில், இந்தியாவுக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, 28.3 ஓவர்களில் 117 ரன்களுக்கு 4 விக்கெட்களைப் பறிகொடுத்தது.

Fri, 15 Sep 202303:24 PM IST

இஷான் கிஷன் அவுட்

இஷான் கிஷன் எல்பிடபிள்யூ . 5 ரன்களில் ஆட்டமிழந்தார் இஷான்.

Fri, 15 Sep 202303:11 PM IST

கில்லியாக விளையாடிய கில்

இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் 9வது அரை சதத்தை பதிவு செய்தார்.

Fri, 15 Sep 202303:00 PM IST

கே.எல்.ராகுலும் அவுட்

கே.எல்.ராகுல் 19 ரன்கள் எடுத்திருந்தபோது மெஹிதி ஹசன் வீசிய பந்தை இழுத்து அடிக்க முயன்றார். அப்போது கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.

Fri, 15 Sep 202302:43 PM IST

13 ஓவர்கள் முடிவில்

13 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

 

Fri, 15 Sep 202302:18 PM IST

ஒரு ரிவ்யூவை இழந்த வங்கதேசம்

வங்கதேசம் ஒரு ரிவ்யூவை இழந்தது. கே.எல்.ராகுல் எல்பிடபிள்யூ ஆகியிருப்பார் என்ற யூகத்தில் வங்கதேச கேப்டன் டிஆர்எஸ் கோரினார். ஆனால், பந்து ஸ்டம்ப்புக்கு மேலே சென்றதால் அவுட் இல்லை என மூன்றாவது நடுவர் தெரிவித்தார்.

Fri, 15 Sep 202302:03 PM IST

திலக் விக்கெட்டும் காலி

முதல் போட்டியிலேயே வங்கதேச பவுலர் தன்ஸிம் ஹசன் சாஹிப் 2 வது விக்கெட்டையும் தூக்கினார். முதலில் ரோஹித்தையும், அடுத்து திலக் வர்மாவின் விக்கெட்டையும் சாய்த்தார்.

Fri, 15 Sep 202301:22 PM IST

இந்தியாவுக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேச அணி

IND vs BAN Asia Cup 2023 live: இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து, 265 ரன்களை எடுத்துள்ளது.

Fri, 15 Sep 202312:34 PM IST

42 ஓவர்கள் முடிவில் வங்கதேசத்தின் நிலை என்ன?

IND vs BAN Asia Cup 2023 live:இந்திய - வங்கதேச அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட் செய்துவரும் வங்கதேச அணி, 42 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்களை இழந்து, 197 ரன்களை எடுத்துள்ளது.

Fri, 15 Sep 202312:19 PM IST

38 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியின் பேட்டிங் நிலவரம்

IND vs BAN Asia Cup 2023 live: இந்திய - வங்கதேச அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட் செய்துவரும் வங்கதேச அணி, 38 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்களை இழந்து, 172 ரன்களை எடுத்துள்ளது.

Fri, 15 Sep 202311:37 AM IST

200 கேட்ச் பிடித்த ரோகித்

ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 200 கேட்ச்களை பிடித்துள்ளார்.

Fri, 15 Sep 202310:14 AM IST

வங்கதேசத்துக்குப் பறிபோன மூன்றாவது விக்கெட்

IND vs BAN Asia Cup 2023 live: இந்திய - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியில், முதலில் பேட் செய்துவரும் வங்கதேச அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைப் பறிகொடுத்தது. மூன்றாவதாக களமிறங்கிய வங்கதேச அணியின், அனமுல் ஹக்கூ, ஷர்துல் தாக்கூரின் பவுலிங்கில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 7.5 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்களை இழந்து, 34 ரன்களுடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

Fri, 15 Sep 202310:06 AM IST

இரண்டு விக்கெட்களை இழந்த வங்கதேசம்

IND vs BAN Asia Cup 2023 live: இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் போட்டியில், முகமது ஷமியின் பந்துவீச்சில் லிட்டன் தாஸ் அவுட்டாகியுள்ளார். டன்ஸித்தின் விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் எடுத்துள்ளார். ஐந்து ஓவர் முடிவில், வங்கதேசம்  இரண்டு விக்கெட்களை இழந்து 24 ரன்களை எடுத்துள்ளது. 

Fri, 15 Sep 202309:37 AM IST

இந்திய - வங்கதேச அணிகள் மோதும் போட்டி தொடங்கியது

IND vs BAN Asia Cup 2023 live: இந்திய - வங்கதேச அணிகள் மோதும் போட்டியானது சரியாக பிற்பகல் 3 மணிக்கு சற்றுமுன் தொடங்கியது. போட்டியின் முதல் ஓவரை முகமதுசமி இந்தியாவின் சார்பில் வீசினார். வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக டன்ஷித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். 

Fri, 15 Sep 202309:20 AM IST

இன்றைய போட்டியில் யாருக்குவாய்ப்பு, யாருக்கு ஓய்வு

IND vs BAN Asia Cup 2023 live: ஷமி, பிரசித், சூர்யகுமார் யாதவ், ஷார்துல் தாக்குர் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோலி, பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப் யாதவுக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 க்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டம் சம்பிரதாய ஆட்டம் ஆகும். இந்த  ஆட்டத்தில் திலக் வர்மா என்னும் வீரர் அறிமுகமாகிறார்.

Fri, 15 Sep 202309:15 AM IST

டாஸில் வென்ற இந்திய அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது!

IND vs BAN Asia Cup 2023 live: இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் இன்றைய கிரிக்கெட் போட்டியில், டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன், ரோஹித் சர்மா, பவுலிங்கை தேர்வு செய்தார்.

Fri, 15 Sep 202309:10 AM IST

பிரேமதாஸா மைதானம் எதற்கு சாதகமானது?

IND vs BAN Asia Cup 2023 live: இந்திய - வங்கதேச அணிகள் மோதும் இன்றையபோட்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் தான் நடக்கிறது.  முன்னதாக, இங்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் போட்டிகள் நடந்தன. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாகப் பார்க்கப்படுகிறது. இங்கு சுமார் 21 ஓவர்கள் வீசி, 19 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர் என தாஸ் குப்தா மற்றும் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளனர். 

Fri, 15 Sep 202309:00 AM IST

இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை; எதற்கு.. இதற்குத்தான்!

IND vs BAN Asia Cup 2023 live: ஷார்ஜாவில் ஆசியக்கோப்பைத் தொடரின் முதல்போட்டி, 39 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கடந்த போட்டியில், பாகிஸ்தானை இலங்கை அணி வீழ்த்தியதால், இம்முறை பரபரப்பான இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறாது. ஆகையால், இப்போட்டிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்து இருக்கவேண்டும்.

Fri, 15 Sep 202308:41 AM IST

திறமையான 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர் -  இந்திய பவுலிங் பயிற்சியாளர்

IND vs BAN Asia Cup 2023 live:  பும்ரா, ஹர்திக் பாண்டியா திருப்திகரமாக பந்துவீசுகின்றனர். சூழலுக்கு ஏற்ப ஒரு பந்துவீச்சாளரைத் தேர்வு செய்யும்போது மற்றொருவர் ஓய்வில் தான் இருக்கவேண்டும். இந்திய அணிக்கு 4 திறமையான பந்துவீச்சாளர்கள் இருப்பதாக இந்திய பவுலிங் பயிற்சியாளர் பரஸ் பாம்ரே தெரிவித்துள்ளார். 

Fri, 15 Sep 202308:28 AM IST

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

IND vs BAN Asia Cup 2023 live: இந்தியா - வங்கதேசம் இதுவரை 39 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் வங்கதேசம் வெறும் 7 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 31 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. எனவே, இந்தியாவுக்கே இப்போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உள்ளன.  

Fri, 15 Sep 202308:20 AM IST

மழைக்கான வாய்ப்பு சற்று குறைவுதான்

மழை பெய்வதற்கான வாய்ப்பு 61 சதவீதம் தான் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Fri, 15 Sep 202306:58 AM IST

ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துத்துக்கு  முன்னேறியுள்ளது

Fri, 15 Sep 202305:39 AM IST

1000 ரன்களை நெருங்கும் சுப்மன் கில்

2023 ஆண்டில் இதுவரை 904 ரன்கள் எடுத்துள்ளார் சுப்மன் கில். இன்னும் 96 ரன்களை அடித்தால் இந்த ஆண்டில் 1000 ரன்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்

Fri, 15 Sep 202305:14 AM IST

புதிய சாதனை நிகழ்த்த ஷாகிப் அல் ஹசானுக்கு மூன்று சிக்ஸர்கள் தேவை 

ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 47 சிக்ஸர்கள் அடித்துள்ள ஷாகிப் அல் ஹசான், இன்னும் 3 சிக்ஸர்கள் அடித்தால் 50 என்ற மைல்கல்லை எட்டுவார். 

Fri, 15 Sep 202304:15 AM IST

கடைசியாக அடுத்தடுத்து இரு முறை இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்

கடைசியாக இந்தியா - வங்கதேசம் அணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் மோதின. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் இந்தியாவை முதல் இரண்டு போட்டிகளில் வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை வென்றது. 

Fri, 15 Sep 202303:48 AM IST

இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வாய்ப்பு!

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் சம்பிரதமாயமாக நடைபெறும் இன்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.

இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Fri, 15 Sep 202303:28 AM IST

இன்றைய போட்டியில் மழைக்கு வாய்ப்பு?

சூப்பர் 4 சுற்று நடந்து வரும் இலங்கையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்றைய போட்டியிலும் மழை குறுக்கீடு இருக்கும். 

Fri, 15 Sep 202303:28 AM IST

இந்தியாவிற்கு எப்படி?

இந்திய அணி ஏற்கனே இறுதிப் போட்டிக்கு தேர்வான நிலையில், இன்றைய போட்டி இந்திய அணிக்கு முக்கியத்துவம் அற்றது.

Fri, 15 Sep 202303:28 AM IST

இந்தியா-வங்கதேச அணிகள்

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.