Ind vs Aus 3rd T20I: இந்தியா-ஆஸி., மோதும் இன்றைய போட்டியில் மழை குறுக்கிடுமா?
India vs Australia 3rd T20I, Guwahati weather update: குவாஹாட்டியில் வானிலை குறித்த சமீபத்திய நிலவரத்தை அறிவோம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டி, அஸ்ஸாம் மாநிலம், கவுஹாட்டியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் வாங்க.
மூன்றாவது T20I இன் போது மழையால் எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. AccuWeather இன் படி, நவம்பர் 28 அன்று நகரத்தில் மேகமூட்டம் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7:00 மணியளவில் ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் இரவு 10:30 மணி அளவில் ஆட்டம் முடியும்போது வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்றைய போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் 2வது டி20 ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.
2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்தியா, இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் ஹாட்ரிக் வெற்றி பெறுவதுடன், தொடரையும் கைப்பற்றிவிடும்.
அவ்வாறு நடந்துவிட்டால் டிசம்பர் 1 ராய்ப்பூரில் 4வது டி20 போட்டியும், பெங்களூரில் டிசம்பர் 3ம் தேதி 5வது டி20 போட்டியும் பெரிய மெனக்கெடல் இல்லாமல் இந்திய அணியால் விளையாட முடியும்.
அதேநேரம், 2 முறை அடிபட்ட ஆஸ்திரேலியா, 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என மல்லுக்கட்டும்.
இதனால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 இந்திய அணி கடந்த 2 ஆட்டங்களிலுமே சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது.
குறிப்பாக பேட்டிங்கில் ஜொலித்து வருகிறது. ஃபீல்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை செய்யும் வீரர்கள், பவுலிங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதலிரண்டு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள ஆஸி., கேப்டன் மேத்யூ வேட், அதிருப்தியில் இருக்கிறார். எனவே, புதிய உத்திகளுடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது.
டாபிக்ஸ்