India first innings: மாஸ் பேட்டிங்.. அரை சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர்!-இந்தியா 160/8
IND vs AUS 5th T20I: இந்திய அணி 160 ரன்கள் எடுத்துள்ளது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி., விளையாடுகிறது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் விளையாடியது.
யஷஸ்வி நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அதிரடியாக விளையாடி டக்கென்று ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர்கள், 1 ஃபோர் உள்பட 15 பந்துகளில் 21 ரன்களை விளாசினார் யஷஸ்வி.
ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ரன்களில் அவரும் நடையைக் கட்டினார்.
பின்னர் களம் புகுந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். ஆனால், மறுமுனையில் கேப்டன் சூர்ய குமார் யாதவ் 5 ரன்னிலும், ரிங்கு சிங் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நிதானமாக விளையாடி, ஸ்ரேயாஸுக்கு தோள் கொடுத்தார். அவர் 24 ரன்கள் எடுத்திருந்தபோது மாத்யூ ஷார்ட்டிடம் கேட்ச் ஆனார்.
அதைத் தொடர்ந்து வந்த அக்சர் படேல், அதிரடியாக ஆடினார். ஆனால், அவரும் 31 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆனார்.
அரை சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், 53 ரன்கள் எடுத்திருந்தபோது எல்லிஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி., விளையாடுகிறது.
இந்த தொடரில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை 2023 போட்டிகள் நடைபெற்ற மைதானத்தில், மீண்டும் போட்டி நடைபெறும் மைதானமாக பெங்களூரு உள்ளது. மிகவும் குறுகிய பவுண்டரி, தட்டையான ஆடுகளம் மற்றொரு பெரிய ஸ்கோருக்கான போட்டியாக இன்றைய அமையக்கூடும் என கணிக்கப்பட்டது. சரியாக கணித்து பந்து வீசுவதன் மூலம் ராய்ப்பூர் போல் இங்கும் ஸ்பின்னர்கள் சாதிக்கலாம் என கணிக்கப்பட்டிருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்