India First Innings: 'சைலண்டா இருக்கணும்'-ருதுராஜ் தூள் சதம்.. ஆஸி.,க்கு எதிராக டி20இல் சதம் விளாசிய முதல் இந்திய வீரர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  India First Innings: 'சைலண்டா இருக்கணும்'-ருதுராஜ் தூள் சதம்.. ஆஸி.,க்கு எதிராக டி20இல் சதம் விளாசிய முதல் இந்திய வீரர்

India First Innings: 'சைலண்டா இருக்கணும்'-ருதுராஜ் தூள் சதம்.. ஆஸி.,க்கு எதிராக டி20இல் சதம் விளாசிய முதல் இந்திய வீரர்

Manigandan K T HT Tamil
Nov 28, 2023 10:31 PM IST

Ind vs Aus 3rd T2OI: ஆஸி., அணிக்கு எதிராக சர்வதேச டி20இல் முதல் சதம் விளாசிய இந்திய வீரர் ஆனார் ருதுராஜ் கெய்க்வாட்.

இந்திய பேஸ்ட்மேன்கள் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் (PTI Photo/Swapan Mahapatra)
இந்திய பேஸ்ட்மேன்கள் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் (PTI Photo/Swapan Mahapatra) (PTI)

ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் நின்று ஆடினார். ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும், இஷான் கிஷன் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ்,29 பந்துகளில் 39 ரன்களை விளாசி ஆரோன் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், அரை சதம் பூர்த்தி செய்தார். 32 பந்துகளில் அரை சதம் விளாசிய அவர், தொடர்ச்சியாக அதிரடி காட்டி புல்லட் வேகத்தில் விளையாடினார்.

இதையடுத்து, அதே வேகத்தில் சதம் விளாசினார். 52 பந்துகளில் அவர் சதம் பதிவு செய்தார். மறுபக்கம் திலக் வர்மா தோள் கொடுத்தார்.

ஆஸி.,க்கு எதிராக டி20இல் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் ருதுராஜ் தான்.

20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கடைசியாக 2022 இல் இந்த மைதானத்தில் விளையாடிய டி20 ஆட்டத்தில் விளையாடின. அந்த ஆட்டத்தில் 458 ரன்கள் எடுக்கப்பட்டது. குவாஹாட்டில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவில் இருக்கும் சிறந்த ஆடுகளங்களில் ஒன்றாகும், மேலும் இந்தத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களைப் போன்று மற்றொரு அதிக ஸ்கோரை ரசிகர்கள் எதிர்பார்த்தோம். டாஸ் வென்று முதலில் பந்துவீசுவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என கூறப்பட்டது, அதைத்தான் ஆஸி., செய்தது. ஏனெனில் ஆட்டத்தின் பிற்பகுதியில் பனி முக்கியப் பங்கு வகிக்கும். என்ன நடக்கும் என பார்ப்போம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.