South Africa vs India: டிஎல்எஸ் முறைப்படி 88 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி
South Africa vs India: உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) 2025 இல் தென்னாப்பிரிக்கா சாம்பியன்களுக்கு எதிரான போட்டியில் இந்தியா சாம்பியன் தோல்வியைத் தழுவியது.

South Africa vs India: டிஎல்எஸ் முறைப்படி 88 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி
எட்ஜ்பாஸ்டன்: உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (டபிள்யூ.சி.எல்) 2025 இல் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இந்திய சாம்பியன்ஸ் அணி செவ்வாய்க்கிழமை எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டது. தீவிர பயிற்சி மேற்கொண்ட போதிலும், நேற்று நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி டிஎல்எஸ் முறைப்படி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இந்தியா சாம்பியன்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் விளையாடியது. அந்த 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.
இந்தியா சாம்பியன்ஸ் 18.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. டிஎல்எஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா 88 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
