IndvsZim: அபிஷேக் சர்மாவின் எழுச்சி.. 2-வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது
IndvsZim: அபிஷேக் சர்மாவின் எழுச்சியால், 2-வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

IndvsZim: அபிஷேக் சர்மாவின் எழுச்சி.. 2-வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது (AP)
IndvsZim: டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு, இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 மேட்ச்களில் விளையாடி வருகிறது.
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2ஆவது டி20 போட்டி, ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரேயில் இன்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்து 234 ரன்கள் குவித்த இந்திய அணி:
அதன்படி, முதலில் இந்திய அணி ஆடியது. ஆரம்பத்தில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில்லும் அபிஷேக் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் துரதிர்ஷ்டவசமாக சுப்மன் கில், இரண்டு ரன்கள் எடுத்தபோது, முசார்பானியின் பந்தில், பென்னிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.