Ind vs Eng 4th T20I: இந்தியா vs இங்கிலாந்து 4வது டி20 நேரம், இடம், பிட்ச் ரிப்போர்ட்.. மேலும் விவரம்
Ind vs Eng 4th T20I: இது அவர்களை ஆட்டத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்க உதவுகிறது. கருப்பு மண் பிட்ச் பேட்டர்களுக்கு ஆரம்ப ஆதரவை வழங்குகிறது, ஆனால் போட்டி முன்னேறும்போது, ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறுகிறது.

Ind vs Eng 4th T20I: இந்தியா vs இங்கிலாந்து 4வது டி20 போட்டி தேதி, நேரம் குறித்து பார்ப்போம். தொடர் இப்போது 2-1 என சமநிலையில் இருப்பதால், நான்காவது டி20 இரு அணிகளுக்கும் முக்கியமானதாகிறது. இந்தியா தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்துடன் விளையாடும் அதே வேளையில், இங்கிலாந்து அணியும் வெற்றி பெற போராடும். 4வது டி20 புனேவில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து 4வது டி20 போட்டி: தேதி மற்றும் நேரம்
ஜனவரி 31, 2025 வெள்ளிக்கிழமை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க (எம்சிஏ) மைதானத்தில் நடைபெறும் நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் போது, தொடரை வெல்ல இந்திய அணி இலக்கு நிர்ணயம் செய்து மல்லுக்கட்டும். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா, கொல்கத்தா மற்றும் சென்னையில் நடந்த மேட்ச்களில் வெற்றிகளுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், ஜோஸ் பட்லரின் இங்கிலாந்து அணி ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் மீண்டும் போராடி ஜெயித்து தொடரை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
நான்காவது டி20 போட்டி இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. மாலை 6:30 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்தியா vs இங்கிலாந்து 4வது டி20 போட்டி: பிட்ச் ரிப்போர்ட்
புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக அறியப்படுகிறது. ஸ்பின்னர்கள் பெரும்பாலும் இந்த மேற்பரப்பில் இருந்து நல்ல திருப்பத்தை தாங்கள் வீசும் பந்தில் பெறுகிறார்கள், இது அவர்களை ஆட்டத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்க உதவுகிறது. கருப்பு மண் பிட்ச் பேட்டர்களுக்கு ஆரம்ப ஆதரவை வழங்குகிறது, ஆனால் போட்டி முன்னேறும்போது, ஸ்பின்னர்கள் கை ஓங்குகிறது. இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இரு அணிகளும் தங்கள் பிளேயிங் XI இல் கூடுதல் ஸ்பின்னர்களை சேர்க்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து 4வது டி20 போட்டி: வானிலை அறிக்கை
ஜனவரி 31 அன்று புனேவில் வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மழை போட்டிக்கு இடையூறு ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ind vs Eng 4வது T20 உத்தேச ப்ளேயிங் XI
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, ராமன்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வருண் சகரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்
இங்கிலாந்து: பென் டக்கெட், பில் சால்ட், ஜோஸ் பட்லர் (C), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.
நேருக்கு நேர் ரெக்கார்டு
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இருப்பினும், இங்கிலாந்து முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஒட்டுமொத்தமாக, டி20 போட்டிகளில் (15-12) இந்தியா, இங்கிலாந்தை விட சற்று முன்னிலை வகிக்கிறது.

டாபிக்ஸ்