IND vs ENG T20: ஈடன் கார்டனில் நடந்த வானவேடிக்கை.. ஐபிஎல் போல் டீல் செய்த அபிஷேக் ஷர்மா - இங்கிலாந்துக்கு செம அடி
IND vs ENG 1st T20 Result: பவுலிங்கில் இந்திய ஸ்பின்னர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்த, பேட்டிங்கில் ஓபனரான அபிஷேக் ஷர்மா அதிரடியாக வானவேடிக்கை காட்டினார். இதனால் இங்கிலாந்தை வீழ்த்தி எளிதான வெற்றியை பெற்றது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என முழுவதுமான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் டி20 தொடர் நடைபெற இருக்கும் நிலையில், முதல் போட்டி கொல்கத்தை ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சூர்யாகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது.
இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 132 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், இதை சேஸ் செய்த இந்தியா அதிரடியாக பேட் செய்து 12.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது
இங்கிலாந்து தடுமாற்றம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் கேப்டன் ஜோஷ் பட்லர் மட்டும் பொறுப்புடன் பேட் செய்து 68 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரி ப்ரூக் 17, ஜோப்ரா ஆச்சர் 12 ரன்கள் அடித்தனர்.மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
இந்திய பவுலர்களில் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்திய பவுலர்களில் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை.
அதிரடியில் மிரட்டிய அபிஷேக் ஷர்மா
133 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்தியா 12.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கான ரன்களை எடுத்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு அதிரடியான ஓபனிங்கை ஓபனர்கள் சஞ்சு சாம்சன் - அபிஷேக் ஷர்மா ஆகியோர் தந்தனர். சாம்பசன் 20 பந்துகளில் 26 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானர். மறுமுனையில் இங்கிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்தார். ஐபிஎல் தொடர்களில் மட்டும் ஆடக்கூடியவர் என்று இருந்த முத்திரயை போக்கும் விதமாக ஈடன் கார்டனில் வானவேடிக்கை நிகழ்த்தினார். 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளை அடித்த அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
20 பந்துகளில் அரைசதமடித்த அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த வாய்ப்பை அடில் ரஷித் தவறவிட்டார். இதை பயன்படுத்தி கொண்ட அவர் 4,6,6,6 என ரன்கள் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அபிஷேக் அதிரடியால் இந்தியாவின் சேஸிங் எளிதான நிலையில், 43 பந்துகள் மீதமிருக்க இந்தியா வெற்றியை பதிவு செய்தது.
பேட்டிங்கில் சொதப்பும் சூர்யகுமார் யாதவ்
360 டிகிரி அதிரடி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த 5 இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இன்றைய போட்டியில் டக் அவுட்டான அவர், இதற்கு முந்தைய நான்கு போட்டிகளில் "பேட்டிங் செய்யவில்லை, 1 (4), 4 (9), 21 (17) என எடுத்துள்ளார்.
தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன், கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் 35 பந்துக்கு 75 ரன்கள் அடித்ததே அவரது லேட்டஸ்ட் சிறந்த இன்னிங்ஸாக உள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்