IND vs ENG 1st T20: ஷமிக்கு ஓய்வு.. வெற்றி காம்பினேஷனுடன் களமிறங்கும் சூர்யா - இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி அணி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Eng 1st T20: ஷமிக்கு ஓய்வு.. வெற்றி காம்பினேஷனுடன் களமிறங்கும் சூர்யா - இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி அணி

IND vs ENG 1st T20: ஷமிக்கு ஓய்வு.. வெற்றி காம்பினேஷனுடன் களமிறங்கும் சூர்யா - இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி அணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 22, 2025 07:00 PM IST

IND vs ENG 1st T20: உலகக் கோப்பை தொடருக்கு பின் கம்பேக் கொடுத்திருக்கும் ஷமிக்கு முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக விளையாடிய டி20 போட்டியில் இடம்பிடித்த வெற்றி காம்பினேஷனுடன் இந்தியா களமிறங்குகிறது.

ஷமிக்கு ஓய்வு.. வெற்றி காம்பினேஷனுடன் களமிறங்கும் சூர்யா - இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி அணி
ஷமிக்கு ஓய்வு.. வெற்றி காம்பினேஷனுடன் களமிறங்கும் சூர்யா - இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி அணி (PTI)

இந்தியா பவுலிங்

இதையடுத்து டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். கடந்த 2023இல் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர் காயத்தால் அவதிப்பட்டு வந்த முகமது ஷமி, சுமார் 14 மாதங்கள் கழித்து அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவர் இன்றைய போட்டியில் களமிறக்கப்படவில்லை.

அதே போல் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோரும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.

கடைசி டி20 போட்டி

இந்தியா தனது கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் விளையாடியது. ஜோகன்னஸ்பெர்கில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் அடித்து, ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த அணி என்ற உலக சாதனை புரிந்தது. இந்த போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் நான்கு போட்டிகள் கொண்ட தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பேட்டிங்கில் 4 போட்டிகளில் தில்க வர்மா 280 ரன்கள் அடித்து டாப் ஸ்கோரராக திகழ்ந்தார். அதேபோல் பவுலிங்கில் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி 12 விக்கெட்டுகளை கைப்பற்றி டாப் பவுலராக இருந்தார். இவர்கள் இருவரும் இந்த தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில், ரமனாதீப் சிங்குக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி என்கிற ஒரே மாற்றத்துடன், அதே வெற்றி காம்பினேஷனில் களமிறங்கியுள்ளார் சூர்யகுமார் யாதவ்

டி20 போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இதுவரை

இதுவரை இவ்விரு அணிகளும் 24 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 13, இங்கிலாந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்திய மண்ணில் 11 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த டி20 போட்டியில் கெவின் பீட்டர்சன் அரைசதம் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டிகளில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

இந்தியா: அபிஷேக் ஷ்ரமா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்

இங்கிலாந்து: பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லயாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் உட்

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.