தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Ban Preview: தெறிக்கவிடும் பவுலிங் அட்டாக்! வங்கதேசத்துக்கு நாக் அவுட் - இந்தியாவுக்கு சூப்பர் சான்ஸ்

IND vs BAN Preview: தெறிக்கவிடும் பவுலிங் அட்டாக்! வங்கதேசத்துக்கு நாக் அவுட் - இந்தியாவுக்கு சூப்பர் சான்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 22, 2024 07:00 AM IST

தெறிக்கவிடும் இந்தியாவின் பவுலிங் அட்டாக்குக்கு எதிராக வங்கதேசம் அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கவுள்ளது. இந்த போட்டி அவர்களுக்கு நாக் அவுட்டாகவும், இந்தியாவுக்கு சூப்பர் சான்ஸ் ஆகவும் அமைந்துள்ளது.

தெறிக்கவிடும் இந்திய பவுலிங் அட்டாக்குக்கு எதிராக வங்கதேசத்துக்கு நாக் அவுட் போட்டி
தெறிக்கவிடும் இந்திய பவுலிங் அட்டாக்குக்கு எதிராக வங்கதேசத்துக்கு நாக் அவுட் போட்டி

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 47வது போட்டியும், சூப்பர் 4 சுற்று 7வது போட்டி இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே ஆன்டிகுவாவில் இருக்கும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று நடைபெற இருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம். எனவே இந்தியாவுக்கு இந்தியாவுக்கு சூப்பர் சான்ஸ் ஆக இந்த போட்டி அமைந்துள்ளது.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியை தழுவிய வங்கதேசம், இந்தியாவுக்கு எதிராக இன்று தோல்வியை தழுவினால் தொடரை விட்டு வெளியேறிவிடும்.

வெற்றி கூட்டணியை தொடரும் இந்தியா

லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் ஒரே அணியுடன் களமிறங்கிய இந்தியா, சூப்பர் 8 சுற்றில் ஒரேயொரு மாற்றமாக முகமது சிராஜ்க்கு பதில், குல்தீப் யாதவை அணியில் சேர்த்தது. இதனை விளைவாக அவரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவிகரமாக புரிந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

எனவே இதே அணியுடனே இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். பேட்டிங்கில் இதுவரை ஜொலிக்காத ஷிவம் துபே, ஸ்பின் அட்டாக்கை கொண்டிருக்கும் வங்கதேசத்துக்கு எதிராக தனது பார்மை நிருபிக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல் லீக் சுற்றில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி விராட் கோலி, சூப்பர் 8 சுற்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 24 ரன்கள் அடித்தார். இருப்பினும் அவர் பழைய பார்முக்கு முழுமையாக திரும்பி வங்கதேசத்துக்கு எதிரான அரைசதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு வாழ்வா சாவா ஆட்டம்

வங்கதேசம் அணிக்கு இந்த போட்டி வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. ஏற்கனவே முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் தோல்வியை தழுவி இருப்பதால் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும். பவுலிங்கில் ஷகிப் அல் ஹசன், முகமதுல்லா, மகேதி ஹசன் ரிஷாத் ஹொசைன் என ஸ்பின்னர்களும் தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் என வேகப்பந்து வீச்சாளர்களும் பவுலிங்கில் பக்காவாக உள்ளது.

இருப்பினும் இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காமல் இருந்து வருகிறார்கள். முக்கியமான இந்த போட்டியில், இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷிதீப் ஷிங் போன்ற தரமான பவுலிங் அட்டாக்குக்கு எதிராக ரன்குவிப்பில் ஈடுபட்டால் மட்டுமே தப்பிக்க முடியும். எனவே நாக் அவுட் ஆவதை தடுக்க வங்கதேசம் போராடும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா - வங்கேதசம் நேருக்கு நேர்

இதுவரை இந்த இரு அணிகளும் 13 முறை டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4 முறை டி20 உலகக் கோப்பை தொடரின் போட்டிகள் உள்பட 12 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2019இல் இந்தியாவில் நடந்த இருதரப்பு தொடரில் வங்கதேசம் அணி, இந்தியாவுக்கு எதிராக ஒரேயொரு முறை வென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான மோதலில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா தன்வசம் வைத்துள்ளார். அவர் 12 டி20 போட்டிகளில் 454 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் பவுலிங்கில் யுஸ்வேந்திர சாஹல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக 6 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.