தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Aus Toss Report: தீபக் சாஹருக்கு பதிலாக இந்த வீரருக்கு வாய்ப்பு.. டாஸ் ஜெயித்த ஆஸி., பந்துவீச்சு தேர்வு

IND vs AUS Toss Report: தீபக் சாஹருக்கு பதிலாக இந்த வீரருக்கு வாய்ப்பு.. டாஸ் ஜெயித்த ஆஸி., பந்துவீச்சு தேர்வு

Manigandan K T HT Tamil
Dec 03, 2023 06:37 PM IST

இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் வரவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ். (PTI Photo/Kunal Patil)
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ். (PTI Photo/Kunal Patil) (PTI)

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் சந்தித்து வருகிறது.

இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வென்ற இந்தியா, 3வது போட்டியில் தோல்வியைத் தழுவியது. எனினும், 4வது போட்டியில் வென்றது. அத்துடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் அப்படியே இருக்கலாம் அல்லது மாற்றமும் இருக்கலாம் என கூறப்பட்டது. அதன்படி, தீபக் சஹருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் வாய்ப்பு பெற்றுள்ளார். தீபக் சஹர் மருத்துவ காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளார்.

பிட்ச் நிலவரம்

இந்த தொடரில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை 2023 போட்டிகள் நடைபெற்ற மைதானத்தில், மீண்டும் போட்டி நடைபெறும் மைதானமாக பெங்களூரு உள்ளது. மிகவும் குறுகிய பவுண்டரி, தட்டையான ஆடுகளம் மற்றொரு பெரிய ஸ்கோருக்கான போட்டியாக இன்றைய அமையக்கூடும் என தெரிகிறது. சரியாக கணித்து பந்து வீசுவதன் மூலம் ராய்ப்பூர் போல் இங்கும் ஸ்பின்னர்கள் சாதிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு பெரிய பங்கு வகிக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் இந்திய வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றதோடு, டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணி என்கிற பாகிஸ்தானின் சாதனையை முறியடித்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியிலும் வேறு சாதனைகளை இந்திய வீரர்கள் நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9