தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Aus 5th T20 Result: விவேகத்துடன் பந்துவீச்சு.. ஆஸி.,யை கதறவிட்ட இந்தியா! கடைசி டி20-இல் அசத்தல் வெற்றி

IND vs AUS 5th t20 Result: விவேகத்துடன் பந்துவீச்சு.. ஆஸி.,யை கதறவிட்ட இந்தியா! கடைசி டி20-இல் அசத்தல் வெற்றி

Manigandan K T HT Tamil
Dec 03, 2023 10:28 PM IST

IND vs AUS: இந்திய அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி., விளையாடியது.

ஆஸி., பேட்ஸ்மேன் டிம் டேவிட், இந்திய பவுலர் ரவி பிஷ்ணோய் (PTI Photo/Shailendra Bhojak)
ஆஸி., பேட்ஸ்மேன் டிம் டேவிட், இந்திய பவுலர் ரவி பிஷ்ணோய் (PTI Photo/Shailendra Bhojak) (PTI)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் விளையாடியது.

இந்திய அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி., விளையாடியது.

ஆஸி., அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 28 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும், மற்றொரு தொடக்க வீரர் ஜோஷ் பிலிப் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் வந்த பென் மெக்டெர்மோட் அரை சதம் விளாசி அசத்தினார்.

ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

இறுதியில் ஆஸி., 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டும், ரஷி பிஷ்ணோய், அர்ஷ்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் எடுத்தனர்.

இந்தியா 4-1 என்ற கணக்கில் இந்தத் தொடரை கைப்பற்றியது.

முன்னதாக, யஷஸ்வி நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அதிரடியாக விளையாடி டக்கென்று ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர்கள், 1 ஃபோர் உள்பட 15 பந்துகளில் 21 ரன்களை விளாசினார் யஷஸ்வி.

ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ரன்களில் அவரும் நடையைக் கட்டினார்.

பின்னர் களம் புகுந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். ஆனால், மறுமுனையில் கேப்டன் சூர்ய குமார் யாதவ் 5 ரன்னிலும், ரிங்கு சிங் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நிதானமாக விளையாடி, ஸ்ரேயாஸுக்கு தோள் கொடுத்தார். அவர் 24 ரன்கள் எடுத்திருந்தபோது மாத்யூ ஷார்ட்டிடம் கேட்ச் ஆனார்.

அதைத் தொடர்ந்து வந்த அக்சர் படேல், அதிரடியாக ஆடினார். ஆனால், அவரும் 31 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆனார்.

அரை சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், 53 ரன்கள் எடுத்திருந்தபோது எல்லிஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி., விளையாடியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.