Ind vs Aus 3rd T20I: ஆஸி., டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.. இந்தியாவுக்கு சாதகமா?
திருவனந்தபுரத்தில் 2வது டி20 ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டி, அஸ்ஸாம் மாநிலம், கவுஹாட்டியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்யும் அணிக்கு போட்டி சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
மைதானம் எப்படி
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கடைசியாக 2022 இல் இந்த மைதானத்தில் விளையாடிய டி20 விளையாடின. அந்த ஆட்டத்தில் 458 ரன்கள் எடுக்கப்பட்டது. பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவில் இருக்கும் சிறந்த ஆடுகளங்களில் ஒன்றாகும், மேலும் இந்தத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களைப் போன்று மற்றொரு அதிக ஸ்கோரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். டாஸ் வென்று முதலில் பந்துவீசுவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும், ஏனெனில் ஆட்டத்தின் பிற்பகுதியில் பனி முக்கியப் பங்கு வகிக்கும்.
2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்தியா, இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் ஹாட்ரிக் வெற்றி பெறுவதுடன், தொடரையும் கைப்பற்றிவிடும்.
அவ்வாறு நடந்துவிட்டால் டிசம்பர் 1 ராய்ப்பூரில் 4வது டி20 போட்டியும், பெங்களூரில் டிசம்பர் 3ம் தேதி 5வது டி20 போட்டியும் பெரிய மெனக்கெடல் இல்லாமல் இந்திய அணியால் விளையாட முடியும்.
அதேநேரம், 2 முறை அடிபட்ட ஆஸ்திரேலியா, 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என மல்லுக்கட்டும்.
இதனால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 இந்திய அணி கடந்த 2 ஆட்டங்களிலுமே சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது.
குறிப்பாக பேட்டிங்கில் ஜொலித்து வருகிறது. ஃபீல்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை செய்யும் வீரர்கள், பவுலிங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதலிரண்டு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள ஆஸி., கேப்டன் மேத்யூ வேட், அதிருப்தியில் இருக்கிறார். எனவே, புதிய உத்திகளுடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது.
ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆடம் ஜம்பா போன்ற ஆஸி.,யின் மூத்த வீரர்கள் சிலர் ஒன்பது வாரங்களாக இந்தியாவில் இருந்ததால் சோர்வு வெளிப்படுகிறது. அவர்களுக்கு கணிசமான ஓய்வு தேவை என்றே தெரிகிறது.
நான்கு பேரும் அடுத்த மாதம் பிக் பாஷ் லீக்கில் விளையாட இருக்கிறார்கள். இது ஆஸி.,யில் விளையாடப்படும் உள்ளூர் கிளப் கிரிக்கெட் ஆகும். ஸ்மித்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் அவரது அடுத்த சர்வதேசப் போட்டியாக இருக்கும்.
இஷான் கிஷன் தொடர்ச்சியாக 2 அரை சதங்களை விளாசி அமர்க்களப்படுத்தி வருகிறார். டெத் ஓவர்களில் ரிங்கு சிங் அற்புதமாக விளையாடி வருகிறார்.
முதல் டி20 ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தோனி ஸ்டைலில் மேட்ச் ஃபினிஷராக திகழ்ந்தார்.
டாபிக்ஸ்