IND vs AFG Innings Break: ஸ்லோவான பிட்ச்சில் சூர்ய குமார், பாண்ட்யா அதிரடி! ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு
கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தர, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் ஸ்லோவான பிட்ச்சில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த தொடரின் 43வது போட்டியும், சூப்பர் 8 சுற்று மூன்றாவது போட்டியாகவும் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே பார்போடாஸில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு பதிலாக ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியிலும் ஸ்பின் ஆல்ரவுண்டர் கரீம் ஜனத்துக்கு பதிலாக தொடக்க பேட்டரும், இடது கை ஸ்பின் பவுலருமான ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்ட்யா 32, விராட் கோலி 24 ரன்கள் அடித்துள்ளனர்.